ராஜஸ்தானின் கங்காநகர் மாவட்டத்தில் நேற்று பகலில் ராணுவ வாகனம் ஒன்று வீரர்களுடன் பயணித்துக் கொண்டிருந்தது. ராஜியசார் பகுதியில் வந்தபோது அந்த ராணுவ வாகனம் திடீரென கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் வாகனம் தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது.
இதனால் ராணுவ வீரர்கள் தீ வளையத்திற்குள் சிக்கிக் கொண்டனர். 5 வீரர்கள் போராடி வாகனத்தைவிட்டு வெளியேறிய நிலையில் காயங்களுடன் தப்பினார்கள். வாகனத்திற்குள் சிக்கிய 3 வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். காயம் அடைந்தவர்கள் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த தகவலை ராணுவ அதிகாரி விக்ரம் திவாரி கூறினார்.