More forecasts: 30 day weather Orlando

இந்தியா

  • All News
  • சுதந்திரத்தின் 75-ம் ஆண்டு கொண்டாட்டங்களின் அடிப்படையாக பொதுமக்கள் பங்கேற்பு இருக்க வேண்டும் - பிரதமர் மோடி
சுதந்திரத்தின் 75-ம் ஆண்டு கொண்டாட்டங்களின் அடிப்படையாக பொதுமக்கள் பங்கேற்பு இருக்க வேண்டும் - பிரதமர் மோடி
Mar 09
சுதந்திரத்தின் 75-ம் ஆண்டு கொண்டாட்டங்களின் அடிப்படையாக பொதுமக்கள் பங்கேற்பு இருக்க வேண்டும் - பிரதமர் மோடி

இந்தியா கடந்த 1947 ஆகஸ்டு 15-ம் நாள் சுதந்திரம் அடைந்தது. இதன் 75-வது ஆண்டு நிறைவு விழா அடுத்த ஆண்டு (2022) வருகிறது.



நாட்டின் சுதந்திர தின 75-வது ஆண்டை சிறப்பாக கொண்டாட மத்திய பா.ஜனதா அரசு திட்டமிட்டு வருகிறது. இந்த கொண்டாட்டங்களை 75 வாரங்களுக்கு முன்னரே தொடங்க திட்டமிட்டு உள்ளது.



அந்தவகையில் வருகிற 12-ந்தேதி இந்த கொண்டாட்டங்கள் தொடங்கப்படும் என தெரிகிறது. இது காந்தியடிகள் மேற்கொண்ட உப்பு சத்யாகிரகத்தின் 91-வது நினைவு நாள் ஆகும்.



இந்தியா சுதந்திரம் அடைந்த 75-வது ஆண்டு விழாவை சிறப்பாக கொண்டாடுவதற்காக பிரதமர் மோடி தலைமையில் உயர்மட்டக்குழு ஒன்றை மத்திய அரசு சமீபத்தில் அமைத்துள்ளது. இதில் 259 பேர் உறுப்பினராக உள்ளனர்.



இதில் முக்கியமாக முன்னாள் ஜனாதிபதி பிரதீபா பாட்டீல், சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி போப்டே, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், 28 மாநில முதல்-மந்திரிகள், லதா மங்கேஸ்கர், ஏ.ஆர்.ரகுமான், நோபல் பரிசு பெற்ற அமர்த்தியாசென், பா.ஜனதா மூத்த தலைவர் எல்.கே.அத்வானி, அனைத்து மத்திய மந்திரிகள், பல்வேறு கவர்னர்கள் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.



மேலும் காங்கிரஸ் தலைவர் சோனியா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி, உத்தரபிரதேச முன்னாள் முதல்-மந்திரிகள் முலாயம் சிங் யாதவ், மாயாவதி போன்ற எதிர்க்கட்சி தலைவர்களும் இந்த குழுவில் உள்ளனர்.



இந்த உயர்மட்டக்குழுவின் முதல் கூட்டம் நேற்று மெய்நிகர் முறையில் நடந்தது. இந்த கூட்டத்துக்கு தலைமை தாங்கி பேசிய பிரதமர் மோடி, 75-ம் ஆண்டு கொண்டாட்டங்களின் அடிப்படையாக, பொதுமக்களின் பங்கேற்பு இருக்க வேண்டும் என தெரிவித்தார்.



இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், ‘1947 முதல் இதுவரை நாம் அடைந்துள்ள சாதனைகளை உலகுக்கு வெளிப்படுத்தும் ஒரு வாய்ப்பாக இந்த கொண்டாட்டங்கள் அமைந்துள்ளன. நமது விடுதலைப்போராட்ட ஹீரோக்களின் தியாகங்களை பற்றி மக்களுக்கு கூறவேண்டியது அவசியம் ஆகும்’ என்று தெரிவித்தார்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Feb24

முதல்முறையாக ‘ராகுல் தமிழ் வணக்கம்’ என்ற பெயரில் அ

May09

ஆந்திர பிரதேசத்தின் கடப்பா மாவட்டத்தில் மாமில்லப்பள

Jan26

இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு உச்சத் தை அ

Sep06

சட்டசபையில் இன்று செய்தி மற்றும் விளம்பரத்துறை மானிய

Oct24

புத்தாடை உடுத்தி, பட்டாசு வெடித்து மக்கள் தீபாவளியை உ

Feb04

சட்டப்பேரவையில் பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேர் விடுதலை

Jul04

திருச்செந்தூர் சுப்பிரமணிய சாமி கோவிலுக்கு நேற்று அற

Jan21

கொரோனா தடுப்பூசி போட்டு கொண்டவர்களுக்கு நோய் எதிர்ப்

Nov23

புதுச்சேரியில் கடந்த சில நாட்களாக பெய்து வந்த கனமழையா

Aug12

மத்திய அரசின் விவசாய திட்டங்கள் மற்றும் வேளாண் திட்டங

Sep14

பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை உத்தர பிரதேச மாநிலம்

Mar12

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக

Jul21