More forecasts: 30 day weather Orlando

இந்தியா

  • All News
  • உக்ரைனில் சிக்கித்தவிக்கும் தமிழர்கள்.. உடனே இந்திய ஒன்றிய அரசு இதை செய்தாக வேண்டும்! சீமான் வலியுறுத்தல்
உக்ரைனில் சிக்கித்தவிக்கும் தமிழர்கள்.. உடனே இந்திய ஒன்றிய அரசு இதை செய்தாக வேண்டும்! சீமான் வலியுறுத்தல்
Feb 24
உக்ரைனில் சிக்கித்தவிக்கும் தமிழர்கள்.. உடனே இந்திய ஒன்றிய அரசு இதை செய்தாக வேண்டும்! சீமான் வலியுறுத்தல்

 உக்ரைனில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்டு தாயகம் அழைத்துவர உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விலியுறுத்தியுள்ளார்.



இதுதொடர்பாக சீமான் வெளியிட்டுள்ள அறிக்கை, உக்ரைன் மீது ரசியா போர்த்தாக்குதல்களைத் தொடங்கியுள்ள நிலையில், அங்குத் தங்கி படித்து வரும் தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மாணவர்கள் மற்றும் நான்காயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் அங்கிருந்து வெளியேற முடியாமல் சிக்கித் தவித்து வருவது மிகுந்த வேதனையளிக்கிறது.



போர்த் தொடங்குவதற்கு முன்பே தங்கள் குழந்தைகளை மீட்க வேண்டிப் பெற்றோர்கள் பலமுறை கோரிக்கை விடுத்தும், மாணவச் செல்வங்களைப் பாதுகாப்பாக மீட்டுக்கொண்டுவராததுடன், மாணவர்களின் நிலைகுறித்து உரியப் பதிலும் அளிக்காது, மெத்தனமாகச் செயல்படும் இந்தியத் தூதரகத்தின் அலட்சியப்போக்கும், இந்திய ஒன்றிய அரசின் பாராமுகமும் வன்மையான கண்டனத்திற்குரியது.



தாங்கள் ஈன்றெடுத்து வளர்த்த அன்பு பிள்ளைகள் சொந்த நாட்டில் உயர்கல்வி படிக்கும் வாய்ப்போ, வசதியோ கைவரப் பெறாத நிலையிலேயே கல்வி உதவித்தொகை மூலம் அயல்நாடு அனுப்பிப் படிக்க வைக்கின்றனர். தற்போது அவர்களது உயிர் பாதுகாப்பே கேள்விக்குறியாகியுள்ள நிலையில் மாணவர்களின் பெற்றோர்களும், குடும்பத்தினரும் மன அமைதி இழந்து தவித்துவருகின்றனர்.



போர்ச்சூழலால் உக்ரைன் நாட்டு அரசு தனது வான்பரப்பு சேவைகளை முடக்கியுள்ளதால், இன்று இந்திய ஒன்றிய அரசால் அனுப்பப்பட்ட விமானம் திருப்பி அனுப்பப்பட்டதையடுத்து உக்ரைன் நாட்டிலிருந்து இந்திய ஒன்றியத்தைச் சேர்ந்த மாணவர்களும், பொதுமக்களும் வெளியேற முடியாமல் தவித்துவருகின்றனர்.



ஆகவே, இந்திய ஒன்றிய அரசு நிலைமையின் தீவிரத்தை உணர்ந்து உக்ரைன் நாட்டில் சிக்கியுள்ள மாணவர்கள் மற்றும் பொதுமக்களை வெளியேற ஏதுவாகச் சிறப்பு அனுமதி பெற்று, தமது சொந்த செலவில் சிறப்பு விமானம் மூலம் தாயகம் மீட்டு அழைத்துவர உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று வலியுறுத்துகிறேன்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Oct05

புதுடெல்லி இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு தொடர்ப

Nov17

பாகிஸ்தானின் நரோவல் மாவட்டத்தில் கர்தார்பூர் என்ற இட

Aug08

காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தியின் டுவிட்டர் கணக்கு த

Feb04

பீகாரில் திருமணம் ஆகாத பெண்களுக்கான கல்வி உதவித் தொகை

Apr27

இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை கடந்த சில வாரங்க

Jul03

திருப்பதி அருகே உள்ள புங்கனூர் அலிபிரி சாலையை சேர்ந்த

Feb14

இந்தியாவில் 82.63 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத

Apr11

ஆந்திர மாநிலத்தின் புதிய அமைச்சரவையில்  இன்று நடிகை

Nov27

உலகையே புரட்டி போட்ட கொரோனா வைரசை மருத்துவத்துறையினர

Sep08

மதுபோதையில் தகராறு செய்ததால் ஆத்திரம் அடைந்த பெண், கொ

Jul18

உத்தர பிரதேச மாநிலம் தியோரியா மாவட்டத்தில் உள்ள மகாதே

Dec19

அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் வெளியிட்ட

Apr06

சத்தீஸ்காரில் நக்சலைட்டுகளுடனான துப்பாக்கி சண்டையில

Mar12

தேசிய விருது பெற்ற இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் தற்போது செ

Jun29

நீட் தேர்வு பற்றிய ஆய்வு குழுவுக்கு எதிராக அரசியல் உள