தலைமன்னார் பியர் இறங்கு துறையில் இன்றைய தினம்(10) மதியம் இந்திய மீனவர்களின் படகுகள் ஏல விற்பனை செய்ய அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் குறித்த ஏலவிற்பனை நிறுத்தப்பட்டுள்ளது.
தலைமன்னார் பியர் இறங்கு துறை பகுதியில் இந்திய மீனவர்களின் படகுகள் ஏல விற்பனை செய்ய அறிவிக்கப்பட்டிருந்தது.
இதனால் ஏல விற்பனையில் கலந்து கொண்டு படகுகளைக் கொள்வனவு செய்ய மன்னார், யாழ்ப்பாணம், முல்லைத்தீவு உள்ளடங்கலாக நாட்டின் பல பாகங்களிலிருந்தும் சுமார் 30 இற்கும் மேற்பட்ட கொள்வனவாளர்கள் வருகை தந்திருந்தனர்.
எனினும் அறிவிக்கப்பட்டது போன்று ஏல விற்பனை இடம் பெறவில்லை என வருகை தந்த கொள்வனவாளர்கள் தெரிவித்தனர்.
இன்று (10)காலை முதல் மதியம் வரை ஏல விற்பனைக்காகக் காத்திருந்த போதும் இறுதி நேரத்திலேயே குறித்த ஏல விற்பனை இடம் பெறாது என ஏற்பாட்டாளர்களினால் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் தூர இடங்களிலிருந்து வருகை தந்த கொள்வனவாளர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றுள்ளனர்.