வடகிழக்கு டெல்லியை சேர்ந்த பாஜக எம்பி மனோஜ் திவாரிக்கு 2-வது முறையாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது:-
ஜனவரி 2-ம் தேதி இரவில் இருந்து உடல் நிலை சரியில்லாமல் இருந்தது. பரிசோதனை செய்ததில் கொரோனா உறுதியாகியுள்ளது. இதனால் உத்தரகண்ட், உத்தரப் பிரதேசத்தில் நடைபெற உள்ள தேர்தல் சுற்றுப் பயணத்தில் என்னால் கலந்துக்கொள்ள முடியவில்லை. என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் கொரோனா பரிசோதனை செய்துக்கொள்ளவும்.
இவ்வாறு மனோஜ் திவாரி கூறினார்.
பாஜக எம்பி மனோஜ் திவாரிக்கு 2021-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல்முறை கொரோனா தொற்று ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.