More forecasts: 30 day weather Orlando

இந்தியா

  • All News
  • 20 பொருட்களுடன் பொங்கல் பரிசு தொகுப்பு -முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!
20 பொருட்களுடன் பொங்கல் பரிசு தொகுப்பு -முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!
Nov 17
20 பொருட்களுடன் பொங்கல் பரிசு தொகுப்பு -முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ரேசன் அட்டைதாரர்களுக்கு பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. அவ்வகையில் 2022ம் ஆண்டுக்கான பொங்கல் பரிசுத் தொகுப்பை வழங்கும்படி முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று உத்தரவிட்டுள்ளார்.



இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழர் திருநாளாம் தைப் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் வகையில் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும், இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் மக்களுக்கும் 20 பொருட்கள் அடங்கிய  தொகுப்பினை வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருப்பதாக கூறப்பட்டுள்ளது.



பொங்கலுக்குத் தேவையான பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், பாசிப்பருப்பு, நெய் போன்ற பொருட்களும், பண்டிகைக் கால சமையலுக்குத் தேவையான மஞ்சள் தூள், மிளகாய்த் தூள், மல்லித்தூள், கடுகு, சீரகம், மிளகு, புளி, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, ரவை, கோதுமை மாவு, உப்பு ஆகிய மளிகைப் பொருட்களும் அடங்கிய துணிப்பை (20 பொருட்கள் அடங்கிய தொகுப்பு) 2 கோடியே 15 லட்சத்து 48 ஆயிரத்து 60 குடும்பங்களுக்கு, மொத்தம் 1088 கோடி ரூபாய் செலவில் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Oct02

தேசிய தந்தை மகாத்மா காந்தியின் 153-வது பிறந்த நாள் விழா ந

May03

விசாரணைகளின் குறைப்பாடுகளை கூறி காலத்தை வீணடிக்காது

Feb13

6கட்ட அகழாய்வு பணிகள் முடிந்த நிலையில் கீழடியில் 7ஆ

Jun26

மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் சட்டங்களுக்க

Jul17

தமிழகத்திற்கு சிறப்பு ஒதுக்கீடாக 1 கோடி கொரோனா தடுப்ப

Apr01

தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், வேட்

Apr03

மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில

Oct20

சென்னையின் குடிநீர் ஆதாரமாக பூண்டி, புழல், செம்பரம்பா

Oct23

மாநில அரசாங்கங்களின் இலவசத் திட்டங்களால் வரிசெலுத்த

Jun23

தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரின் வீட்டில் நேற்ற

Aug19

திமுக அரசு அனைத்து துறைகளிலும்

Jun16

கொரோனா தொற்றினால் பெற்றோர் 2 பேரையோ அல்லது அவர்களில் ஒ

Sep16

அண்ணாவின் 113-வது பிறந்த நாளை முன்னிட்டு, அண்ணாசாலையில்

Jun06

முஹம்மது நபியைப் பற்றி சர்ச்சை

முஹம்மது நபியைப் ப

Jun12

பிரதமர் மோடியில் தொடங்கி பஞ்சாப் முதல்-மந்திரி அமரிந்