இன்றைய தினம் மட்டக்களப்பு மாவட்டத்தில் சின்ன ஊறணி, கருவப்பங்கேணி ஆகிய கிராம சேவகர் பிரிவுகளிலுள்ள 30 – 60 வயதுக்கு இடைப்பட்டவர்களுக்கான இரண்டாம் கட்ட தடுப்பூசி ஏற்றல் இடம்பெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
திருச்செந்தூர், நாவற்குடா கிழக்கு, புளியந்தீவு தெற்கு ஆகிய கிராம சேவகர் பிரிவுகளில் திட்டமிட்ட படி இரண்டாம் கட்ட தடுப்பூசி ஏற்றல் இடம்பெறும்.
தடுப்பூசி அட்டையுடன் சமூகமளிக்கும் படி பொதுமக்களை சுகாதாரத்துறையினர் கேட்டுக்கொள்கின்றனர்.