ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 70 ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு கொவிட்-19 பேரிடர் கால இரத்ததான நிகழ்வு இன்றைய தினம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.
நாடாளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளர் அங்கஜன் இராமநாதன் இளைஞர் அணியின் ஏற்பாட்டில் வடமராட்சி, உடுப்பிட்டியில் தொகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் அலுவலகத்தில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.
இதன்போது நாடாளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளர் அங்கஜன் இராமநாதனின் பிரத்தியோக செயலாளர் கே.சிவராம், கட்சியின் யாழ் மாவட்ட அமைப்பாளர், உடுப்பிட்டி தொகுதி அமைப்பாளர், பிரதேச சபை உறுப்பினர்கள், இளைஞர்கள் மற்றும் பெண்கள் என பலர் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
