More forecasts: 30 day weather Orlando

உலகம்

  • All News
  • நடுவானில் வங்காளதேச விமானிக்கு மாரடைப்பு!
நடுவானில் வங்காளதேச விமானிக்கு மாரடைப்பு!
Aug 28
நடுவானில் வங்காளதேச விமானிக்கு மாரடைப்பு!

வங்காளதேச விமானம் ஒன்று மஸ்கட்டில் இருந்து டாக்காவுக்கு 126 பயணிகளுடன் வந்து கொண்டிருந்தது. விமானம் இந்திய எல்லைக்குள், ராய்ப்பூர் அருகே வந்த போது விமானிக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதனால் விமானத்தில் ஒரே பரபரப்பு ஏற்பட்டது. மருத்துவ காரணங்களுக்காக விமானத்தை தரையிறக்க அனுமதிக்கவேண்டும் என்று கோரி, மற்றொரு விமானி கொல்கத்தா விமான கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தார். ஆனால் விமானம் ராய்ப்பூர் அருகில் இருப்பதால் அருகில் உள்ள நாக்பூர் விமான நிலையத்தில் தரையிறங்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டது.



அதோடு கொல்கத்தா விமான கட்டுப்பாட்டுத்தளத்தில் இருந்து நாக்பூர் விமான கட்டுப்பாட்டுத்தளத்திற்கு  தகவல் தெரிவிக்கப்பட்டது. வங்காளதேச விமானியும் இது தொடர்பாக நாக்பூர் விமான நிலையத்திற்கு தகவல் கொடுத்தார். இதனால் நாக்பூர் விமான நிலையத்தில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டு, ஆம்புலன்ஸ் தயார் நிலையில் வைக்கப்பட்டது. விமானம் எந்தவித பிரச்சினையும் இன்றி பத்திரமாக நாக்பூர் விமான நிலையத்தில் தரையிறங்கியது.



உடனே விமானத்தில் இருந்த விமானி ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். தக்க நேரத்தில் துணை விமானி விமானத்தை நாக்பூரில் தரையிறக்கியதால் 126 பயணிகள் உயிர் தப்பினர். விமானிக்கு தற்போது நாக்ப்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.



நாக்ப்பூருக்கு வந்த விமான நிர்வாகத்தின் மாற்று குழுவினர், பயணிகளை வங்காளதேசம் அழைத்துச் சென்றனர்.



கொரோனா கட்டுப்பாடு காரணமாக குறிப்பிட்ட அந்த வங்காளதேச விமான நிறுவனம் இந்தியாவுக்கான விமான சேவையை நிறுத்தியிருந்தது. சமீபத்தில்தான் அந்நிறுவனம் தனது சேவையை இந்தியாவுக்கு தொடங்கி இருந்தது குறிப்பிடத்தக்கது.



 






வரவிருக்கும் நிகழ்வுகள்
Mar03

ரஷிய அதிபர் புதினையும், அவரது அரசின் ஊழலையும் கடுமையா

Apr01

தொடர்ந்து 36வது நாளாக உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப

Feb28

கரீபியன் தீவு நாடுகளில் ஒன்று ஹைதி. இதன் தலைநகர் போர்ட

Apr06

இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் இந்த மாத இறுதியில்

Mar11

தமது நாட்டில் உற்பத்தியை நிறுத்தியுள்ள வெளிநாட்டு நி

Apr14

பிரான்ஸ் நாட்டில் கொரோனா தொற்று பாதித்தவர்கள் பலரிடம

Jul13

கரீபியன் தீவில் அமைந்துள்ள மிகவும் ஏழ்மையான நாடு ஹைதி

May18

சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நா

Mar16

ரஷ்ய - உக்ரைன் போர் தீவிரமடைந்து வரும் நிலையில், ரஷ்யா

Feb05

மியன்மாரில் கைது செய்து சிறை வைக்கப்பட்டுள்ள ஆங் சான்

Jun06