More forecasts: 30 day weather Orlando

உலக விளையாட்டு

  • All News
  • இங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்ட்- இந்தியா இன்னிங்ஸ் தோல்வி...
இங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்ட்- இந்தியா இன்னிங்ஸ் தோல்வி...
Aug 28
இங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்ட்- இந்தியா இன்னிங்ஸ் தோல்வி...

இந்தியா- இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி லீட்ஸ் ஹெட்டிங்லே மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்று முதலில் ஆடிய இந்திய அணி, முதல் இன்னிங்சில் 40.4 ஓவர்களில் 78 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இங்கிலாந்து 432 ரன்கள் குவித்தது. 



இதையடுத்து, 2வது இன்னிங்சை தொடங்கிய இந்தியா நிதானமாக ஆடியது. துவக்க வீரர் கே.எல்.ராகுல் 8 ரன்னில் அவுட்டான நிலையில், அடுத்து இறங்கிய புஜாரா, ரோகித்துடன் ஜோடி சேர்ந்து நிதானமாக ஆடினார். ரோகித்-புஜாரா ஜோடி 82 ரன்கள் சேர்த்தது. அரை சதம் கடந்த ரோகித் 59 ரன்னில் அவுட்டானார். 



அடுத்து களமிறங்கிய கேப்டன் விராட் கோலியும், பொறுமையுடன் ஆடினார். அத்துடன், மேற்கொண்டு விக்கெட் விழாமல் பார்த்துக் கொண்டார். இதனால், மூன்றாம் நாள் ஆட்டநேர இறுதியில் இந்தியா 2 விக்கெட் இழப்பிற்கு 215 ரன்கள் எடுத்திருந்தது. புஜாரா 91 ரன்னுடனும், விராட் கோலி 45 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.



இன்று நான்காம் நாள் ஆட்டத்தின்போது, இங்கிலாந்து பவுலர்கள் புதிய பந்தை பயன்படுத்தினர். ஆடுகளமும் சற்று ஈரப்பதமாக இருந்ததால் பந்து ஸ்விங் ஆனது. எனவே, பந்துகளை எதிர்கொள்ள முடியாமல் பேட்ஸ்மேன்கள் திணறினர். புஜாரா மேற்கொண்டு ரன் எதுவும் எடுக்காமல் 91 ரன்களில் வெளியேறினார். அவரைத் தொடர்ந்து, ரகானே 10 ரன்கள், ரிஷப் பண்ட் 1 ரன், ஷமி 6 ரன், இஷாந்த் சர்மா 2 ரன் என சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். 



கடைசி நேரத்தில் அதிரடியாக ஆடிய ஜடேஜா 24 பந்துகளில் 5 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 30 ரன்கள் சேர்த்தார். கடைசி விக்கெட்டான சிராஜ், வந்த வேகத்தில் பெவிலியன் திரும்ப,  278 ரன்களில் இந்தியா ஆல் அவுட் ஆனது. இதனால் இன்னிங்ஸ் மற்றும் 76 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா தோல்வியை தழுவியது. 



2வது இன்னிங்சில் இங்கிலாந்து தரப்பில் ராபின்சன் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஓவர்டன் 3 விக்கெட் எடுத்தார்.



இந்த போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றதால் 5 போட்டி கொண்ட டெஸ்ட் தொடர் 1-1 என சமநிலையில் உள்ளது. 4வது போட்டி செப்டம்பர் 2ம் தேதி தொடங்க உள்ளது.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Jul25

டோக்கியோ ஒலிம்பிக் பெண்கள் 10 மீ ஏர் பிஸ்டல் துப்பாக்கி

Feb08

பங்களாதேஷ் அணிக்கெதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில், ம

Oct24

மேலும் மூன்று இலங்கை வீரர்கள் அவுஸ்திரேலியாவிற்கு அழ

Feb04

ஜனவரி மாதத்துக்கான சிறந்த வீரருக்கான பரிந்துரைப் பட்

Jan23

ஐபிஎல். மெகா ஏலம் அடுத்த மாதம் நடைபெற உள்ள நிலையில், பி

Feb05

இலங்கையின் மிகவும் பழைமைவாய்ந்த கிரிக்கெட் கழகங்களி

Jan19

அவுஸ்ரேலியா அணிக்கெதிரான நான்காவதும் இறுதியுமான டெஸ

Dec22

ராஜஸ்தானின் ஜெய்ப்பூர் நகரில் விஜய் ஹசாரே கோப்பை கிரி

Mar15

இந்தியா மற்றும் இலங்கைக்கான இரண்டாவது டெஸ்ட் போட்டி ப

Oct04

ரி-20 உலகக்கிண்ணத் தொடரில் இருந்து இந்தியக் கிரிக்கெட்

Nov09

டி20 உலக கோப்பை தொடரின் சூப்பர் 12 சுற்று நேற்றுடன் நிறைவ

Oct03

தென்னாபிரிக்கா அணிக்கெதிரான இரண்டாவது ரி-20 போட்டியில

Oct22

உலகக்கிண்ண இருபதுக்கு இருபது கிரிக்கட் போட்டித் தொடர

Jan23

விக்கெட் காப்பு துடுப்பாட்ட வீரரான ரொபின் உத்தப்பாவை,

Jul28

இலங்கையுடனான கிரிக்கெட் தொடரில் பங்கேற்றுள்ள இந்திய