கேரளாவில் தினசரி கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் வரும் திங்கள் கிழமை முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஞாற்றுக்கிழமை ஊரடங்கு தீவிரப்படுத்தப்படும் என கேரளா முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். கேரளாவில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு ஊரடங்கில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்பிறகு தினசரி கொரோனா பாதிப்பு 30 ஆயிரத்தைக் கடந்து பதிவாகிக் கொண்டிருக்கிறது. உயிரிழப்பும் நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது.இதனைத் தொடர்ந்து கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த திங்கள் கிழமை முதல் இரவுநேர ஊரடங்கை அமல்படுத்த அம்மாநில அரசு முடிவு செய்திருக்கிறது. அதன்படி, இரவு 10 மணி முதல் காலை 6 மணிவரை ஊரடங்கு அமலில் இருக்கும் என கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்திருக்கிறார்.
இந்தியாவிலேயே முதன் முதலில் கொரோனா பரவிய மாநிலம் கேரளா ஆகும். இதையடுத்து பல்வேறு மாநிலங்களுக்கு தொற்று பரவினாலும் தற்போது பெரும்பாலானா மாநிலங்களில் கொரோனா கட்டுக்குள் கொண்டுவரப்பட்டு உள்ளது. அதேவேளையில் கேரளாவில் இன்னும் கொரோனா பரவலின் தாக்கம் குறைந்தபாடு இல்லை. தற்போதுவரை பாதிப்பு உச்சத்தை தொட்ட நிலையில் தன் உள்ளது. அதன்படி கடந்த 2 மாதமாக கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை மிக அதிகமாக உள்ளது.
இந்தியாவில் தினசரி நோயாளிகள் எண்ணிக்கையில் 60 சதவீதத்திற்கு மேல் கேரளாவில் தான் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 3 மாதத்திற்கு பிறகு 4 நாட்களாக தினசரி பாதிப்பு 30 ஆயிரத்தை தாண்டி பதிவாகி வருகிறது. ஓணம் பண்டிகைக்கு பின் கேரளாவில் கொரோனா அதிகரித்து சி வரும் நிலையில் மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளது.
அதில் கேரளாவின் 14 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. கேரளாவில் கொரோனா கட்டுப்பாடுகளை தீவிரமாக கண்காணிக்க வேண்டும். பொதுமக்கள் அதிகம் கூடுவதை தடுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கொரோனா பரிசோதனையை அதிகப்படுத்துவதுடன் தடுப்பூசி போடும் பணியையும் தீவிரப்படுத்த வேண்டும். அண்டை மாநிலங்களில் இருந்து வருவோரை கண்காணித்து தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும். மராட்டியத்தில் பண்டிகை நாட்களில் கூட்டத்தை தவிர்க்க கட்டுப்பாடுகளை விதிக்கலாம் இவ்வாறு குறிப்பிட்டுள்ளது.