ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றி உள்ளனர். இதையடுத்து அங்கிருந்து வெளிநாட்டினர் அதிகளவில் வெளியேறி வருகின்றனர்.
அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், இந்தியா உள்ளிட்ட நாடுகள் தங்களது குடிமக்களை வெளியேற்ற நடவடிக்கை மேற்கொண்டுள்ளன.
இதன் காரணமாக காபூலில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் தினமும் ஆயிரக்கணக்கானோர் குவிந்து வருகிறார்கள்.
இந்த நிலையில் விமான நிலையத்தின் நுழைவு வாயில் பகுதியில் விமானத்துக்காக காத்திருந்த மக்கள் கூட்டத்தின் மத்தியில் 2 குண்டு வெடிப்புகள் நிகழ்த்தப்பட்டன. மேலும் துப்பாக்கி ஏந்திய பயங்கரவாதிகளும் கூட்டத்தினரை நோக்கி சுட்டனர்.