More forecasts: 30 day weather Orlando

சினிமா

  • All News
  • உற்சாகப்படுத்துவார்... சிரிக்க வைப்பார்... தங்கதுரை நெகிழ்ச்சி!
உற்சாகப்படுத்துவார்... சிரிக்க வைப்பார்... தங்கதுரை நெகிழ்ச்சி!
Aug 27
உற்சாகப்படுத்துவார்... சிரிக்க வைப்பார்... தங்கதுரை நெகிழ்ச்சி!

பழைய ஜோக் தங்கதுரை என்ற அடைமொழி கொண்ட தங்கதுரை, தற்போது தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்து வருகிறார். ‘ஏ ஓன்’, ‘அண்ணனுக்கு ஜே’, ‘ஜாக்பாட்’, ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’, ‘பாரீஸ் ஜெயராஜ்’ உட்பட ஏராளமான படங்களில் நடித்த இவர் சமீபத்தில் வெளியான ‘சார்பட்டா பரம்பரை’யில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். 



இப்படம் குறித்து தங்கதுரை கூறும்போது, ‘‘சார்பட்டா பரம்பரை’ எனக்கு திருப்பு முனை கொடுத்த படம்னு சொல்லலாம். ஏற்கனவே பல படங்கள் பண்ணியிருந்தாலும் இந்தப் படம் என்னை உலகம் முழுக்க உள்ள தமிழர்களிடம் கொண்டு போய் சேர்த்துள்ளது. இந்த பெருமை எல்லாம் பா.ரஞ்சித்தையே சேரும்.



பா.ரஞ்சித் சார் ரொம்ப பொறுமைசாலி. எவ்வளவு பெரிய கூட்டமாக இருந்தாலும் நடிகர், நடிகைகளிடம் டென்ஷன் இல்லாமல் கூலாக வேலை வாங்குவார். ‘கபாலி’ டைம்ல பா.ரஞ்சித்தை சந்தித்து வாய்ப்பு கேட்டேன். ‘சார்பட்டா’வில் ஞாபகம் வைத்து வாய்ப்பு கொடுத்தார். முக்கியத்துவம் உள்ள வர்ணனையாளர் கேரக்டரை என்னை நம்பி கொடுத்தார். ‘டேக்’ சிறப்பாக பண்ணும்போது யூனிட்ல உள்ளவங்களை கைதட்டச் சொல்லி உற்சாகப்படுத்துவார். சில சமயம் உணர்ச்சிவசப்பட்டு பேசிக்கொண்டேயிருப்பேன். ‘ஷாட் எப்போதோ முடிந்துவிட்டது. போய் ரெஸ்ட் எடுத்துக்கோ’னு சிரிக்க வைப்பார். ஆர்யா, பசுபதி ஜி.எம்.சுந்தர், கலையரசன், காளிவெங்கட், ஜான்விஜய் உட்பட மொத்த டீமும் ஜாலியாக பழகினார்கள். படம் மிகப் பெரிய வெற்றி அடைந்திருக்கிறது.



விரைவில் வெளிவரவுள்ள யோகிபாபுவின் ‘பன்னிகுட்டி’, சி.வி.குமார் தயாரிப்பில் மனோ கார்த்திக் இயக்கும் ‘ஜாங்கோ’, ரியோவின் ‘ப்ளான் பண்ணி பண்ணனும்’, மதிமாறன் இயக்கும் ‘செல்பி, ஆதியின் ‘பார்ட்னர்’, சிம்பு, ஹன்சிகாவின் ‘மஹா’ போன்ற படங்களில் வெரைட்டியான தங்கதுரையை பார்க்கலாம்.



சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சூர்யா- பாண்டிராஜ் இணைந்திருக்கும்‘ எதற்கும் துணிந்தவன்’, கல்யாண் இயக்கத்தில் பிரபுதேவா நடிக்கும் படம், சிபிராஜ் நடிக்கும் படம், ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் படம், சன்னிலியோன் நடிக்கும் படம் உட்பட ஏராளமான படங்கள் கைவசம் இருக்கிறது’ என்றார்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Sep29

பன்றிக்கு நன்றி சொல்லி படத்தின் இசை வெளியீட்டு விழா ச

Feb03

இனி வரும் வாரங்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படு

Sep13

 கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில் பிரசித்தி

Mar07

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் நடுவராக இருந்து கலக்கி

May09
Aug19

தமிழில் ஒரு சில படங்களில் நடித்துள்ள நடிகை மீரா மிதுன

Feb06

தமிழில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்

Mar06

ரஜினி மகள் ஐஸ்வர்யா மற்றும் நடிகர் தனுஷ் இருவரும் காத

Mar15

விஜய் டிவியின் பாக்கியலட்சுமி தொடரில் கோபி எப்போது கை

Feb24

தற்போது உலகம் முழுவதும் விஜய்யின் பாடல் தான் அரபிக்

May01

இந்திய சினிமாவில் யாரும் எதிர்ப்பாரத வெற்றியை கே ஜி எ

Aug07

சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்த ‘சூரரைப்போற்

Jun11

நயன்தாரா-விக்னேஷ் சிவன் தென்னிந்திய சினிமாவில் புதும

Apr02

இந்தி திரையுலகின் பிரபல நடிகை ஆலியா பட் (28).  இவர் மும்

May24

நடிகர் நகுல் தன் நீண்டகால காதலியான ஸ்ருதி பாஸ்கரை கடந