More forecasts: 30 day weather Orlando

உலகம்

  • All News
  • காதலுக்கு கண் இல்லை மனித குரங்கிடம் மனதை பறி கொடுத்த இளம்பெண்: உயிரியல் பூங்காவிற்கு வர தடை!
காதலுக்கு கண் இல்லை மனித குரங்கிடம் மனதை பறி கொடுத்த இளம்பெண்: உயிரியல் பூங்காவிற்கு வர தடை!
Aug 26
காதலுக்கு கண் இல்லை மனித குரங்கிடம் மனதை பறி கொடுத்த இளம்பெண்: உயிரியல் பூங்காவிற்கு வர தடை!

பெல்ஜியத்தில் உயிரியல் பூங்காவில் இருக்கும் மனித குரங்குடன் நெருங்கி பழகியதால் பூங்காவிற்கு வர பெண்ணுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பெல்ஜியம் நாட்டில் ‘ஆன்ட்வெர்ப்’ என்ற உயிரியல் பூங்கா உள்ளது. இங்கு, 38 வயதில் ஆண் மனித குரங்கான சீடா உட்பட ஏராளமான மனித குரங்குகள் இருக்கின்றன. பூங்காவிற்கு வரும் பார்வையாளர்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படக் கூடாது என்பதற்காக, இவை கண்ணாடி கூண்டில் அமைக்கப்பட்டுள்ளன. இந்த பூங்காவிற்கு வாரத்திற்கு ஒருமுறை, அடிய் டிம்மர்மேன்ஸ் என்ற பெண் வந்து விலங்குகளை பார்வையிட்டு செல்வார்.  சீடாவுடன் அவர் சைகை  மூலமாக பேசத் தொடங்கினார். இவருக்கும் சீடாவிற்கும் இடையே பாசப்பிணைப்பு உருவானது. இதனால், மற்ற  குரங்குகளுடன் சேர்வதை சீடா தவிர்த்து விட்டது. வாரத்திற்கு 4 நாட்கள் பூங்காவிற்கு அடிய் வந்து விடுவார். பல மணி நேரம் சீடாவுடன் செலவிடுவார்.



இடையே கண்ணாடி  இருந்த போதிலும் இருவரும் மாறி மாறி முத்தமழை பொழிந்து கொண்டுள்ளனர். மேலும், பூங்காவிற்கு வரும் மற்ற பார்வையாளர்களை சீடா பொருட்படுத்துவது கிடையாது. அதிகபட்சமாக ஒரு நாள் சுமார் 15 மணி நேரம் சீடாவும், அடிய்யும் தனிமையில் செலவழித்துள்ளனர். அடிய்யின் இந்த நெருங்கிய உறவின் காரணமாக, பூங்காவிற்கு வரும் மற்ற பார்வையாளர்களுடன் சீடா நடந்து கொள்ளுவதில் பாதிப்பை ஏற்படுத்தலாம் என பூங்கா நிர்வாகிகள் அச்சமடைந்தனர். இதனால், பூங்காவுக்கு வர வேண்டாம் என அடிய்க்கு அவர்கள் தடை விதித்துள்ளனர். அவர் சீடாவை இனி பார்க்க முடியாது. இந்த தடை உத்தரவை கேட்டதும் அடிய், கண்கலங்கினார். ‘ஐ லவ் சீடா.... அதுவும் என்னை நேசிக்கிறது. எனக்கு வேறு எதுவும் கிடைக்கவில்லை. ஏன் எங்களை பிரிக்க நினைக்கிறீர்கள். எங்களுக்குள் ஒரு உறவு இருக்கிறது,’ என தெரிவித்துள்ளார்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Jun02

கிழக்கு ஆப்பிரிக்க நாடான உகாண்டாவில் அதிபர் யோவேரி மு

Dec27

ஆஸ்திரேலியாவில் அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலமாக நியூ

Mar07

உக்ரைனில் ரஷ்ய துருப்புகள் கடும் சேதங்களை விளைவித்து

Jun13

ஜி7 கூட்டமைப்பின் 47-வது உச்சி மாநாடு, பிரிட்டனின் கார்ன

May18

கார்கிவை பாதுகாக்கும் உக்ரேனிய துருப்புக்கள் ரஷ்யா எ

Mar09

உக்ரேனில் நடைபெற்று வருகின்ற சண்டைகள் வெறுமனே உக்ரேன

Aug18