More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • வவுனியாவில் 152 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதுடன், மூவர் மரணம்!
வவுனியாவில் 152 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதுடன், மூவர் மரணம்!
Aug 25
வவுனியாவில் 152 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதுடன், மூவர் மரணம்!

வவுனியாவில் 152 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதுடன், மூவர் மரணமடைந்துள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். வவுனியாவில் இனங்காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்புகளைப் பேணியோர்,



வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டோர் மற்றும் எழுமாறாக மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் மற்றும் அன்டிஜன் பரிசோதனையின் முடிவுகள் சில நேற்று (24.08.2021) இரவு வெளியாகின



அதில் வவுனியா, வவுனியா வடக்கு, செட்டிகுளம், வவுனியா தெற்கு ஆகிய பிரிவுகளை உள்ளடக்கியதாக மாவட்டம் முழுவதும் கொரோனா தொற்று பரவல் அடைந்துள்ள நிலையில் 152 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.



இந்நிலையில் தொற்றாளர்களை கொரோனா சிகிச்சை நிலையத்திற்கு அனுப்பி வைப்பதற்கும் அவர்களுடன் தொடர்புடையவர்களை தனிமைப்படுத்துவதற்கும் சுகாதாரப் பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.



மேலும் வவுனியா, மகாறம்பைக்குளம் பகுதியில் வசிக்கும் 28 வயது இளைஞன் ஒருவர் திடீரென உடல் சுகவீனமுற்ற நிலையில் வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டு வரப்பட்டிருந்தார்.



இருப்பினும் அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவதற்கு முன்னரே மரணமடைந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து குறித்த இளைஞனுக்கு மேற்கொண்ட பிசீஆர் பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.



அத்துடன் வவுனியா, புளியங்குளம் வைத்தியசாலையில் சுகவீனம் காரணமாக அனுமதிக்கப்பட்ட 55 வயதுடைய நபரொருவர் அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக வவுனியா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.



வவுனியா வைத்தியசாலையின் அனுமதிக்கப்பட்ட போது அவர் மரணமடைந்தார். அவரிடம் மேற்கொள்ளப்பட்ட பிசீஆர் பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.



இது தவிர வவுனியா வைத்தியசாலையின் கொரோனா விடுதியில் சிகிச்சை பெற்று வந்த நெளுக்குளம் பகுதியைச் சேர்ந்த 66 வயது நபர் ஒருவரும் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார். இந்நிலையில் மரணித்த மூவரது உடல்களையும் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி தகனம் செய்ய சுகாதாரப் பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.



 






வரவிருக்கும் நிகழ்வுகள்
Jan19

 திடீரென மயக்கமடைந்ததன் காரணமாக, 12 மாணவர்கள் வட்டவளை

May22

நாட்டில் பயண தடை அமுல்படுத்தப்பட்டுள்ளமையினால் மலைய

Feb08

ஐக்கிய மக்கள் சக்தியின் 100 தொகுதி அமைப்பாளர்களை நியமிக

Mar01

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி அதி

May12

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச உள்ளிட்ட அரசாங்கத்தை பதவி வ

Apr30

மக்கள் விடுதலை முன்னணியின்  தலைவரும் நாடாளுமன்ற உறு

Jun15

மட்டக்களப்பு கரடியனாறு காவற்துறை பிரிவிலுள்ள மரப்பா

Mar29

அம்பாறை திருக்கோவில் பிரதேசத்தில் வயோதிப பெண் ஒருவர்

Jun23

முழு அரசுக்கும் எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண

Jun13

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மொரட்டுவ பல்கலைக

Mar10

வெள்ளைப் பூரான் கடிப்பதால் ஏற்படும் விஷம் உயிர் ஆபத்த

Jun09

யாழ்ப்பாணத்தில் பட்டப்பகலில் வீடு உடைத்து பெறுமதி வா

Oct25

சீரற்ற காலநிலை காரணமாக ஏதேனும் அனர்த்தம் ஏற்பட்டால்,

Apr03

மின்வெட்டு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் மக்கள் படும்

Mar13

அண்மையில் புகையிரதத்தில் விட்டுச் செல்லப்பட்ட குழந்