பொன்னியின் செல்வன்’ அடுத்தக்கட்ட படப்பிடிப்பை தற்போது மத்தியபிரதேசத்தில் மணிரத்னம் துவங்கியுள்ளார்.
‘பொன்னியின் செல்வன்’ படத்தை பிரம்மாண்ட உருவாக்கி வருகிறார் மணிரத்னம். இருபாகங்களாக உருவாகும் இப்படம் கல்கியின் வரலாற்று நாவலான பொன்னியின் செல்வன் கதையை மையமாக வைத்து உருவாகிறது. சுமார் 500 கோடி ரூபாயில் தயாராகும் இப்படத்தை தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் என 5 மொழிகளில் வெளியிட திட்டமிடப்பட்டிருக்கிறது.
இப்படத்தின் முதல் பாகத்தின் 70 சதவீத பணிகள் முடிந்துவிட்ட நிலையில், மீதமுள்ள படப்பிடிப்பு தீவிரமாக நடைபெற்று வருகிறது. கடந்த மாதம் புதுச்சேரி உள்ள மலைப்பகுதி ஒன்றில் படப்பிடிப்பு நடைபெற்று வந்தது. இதையடுத்து ஐதராபாத் சென்ற படக்குழு, அங்கு படத்தின் முக்கிய போர் காட்சிகளின் படப்பிடிப்பை நடத்தி வந்தனர். இந்நிலையில் இந்த படப்பிடிப்பு முடிவுற்ற நிலையில் அடுத்தக்கட்ட படப்பிடிப்பிற்காக மத்திய பிரதேச மாநிலம் ஒர்ச்ஹா பகுதிக்கு சென்றுள்ளார். இந்த பகுதியில் பழங்கால கோவில்கள், கோட்டைகள் நிறைந்திருப்பதால் மீதமிருக்கும் படப்பிடிப்பை அங்கேயே நடத்தவுள்ளனர். இதற்காக குவாலியர் விமான நிலையம் சென்றபோது எடுக்கப்பட்ட புகைப்படத்தை மணிரத்னம் பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படத்தில் மணிரத்னத்துடன் நடிகர் பிரகாஷ் மற்றும் கார்த்தி உள்ளனர். இதைத்தொடர்ந்து படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற உள்ளது.
மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் லைகா நிறுவனமும் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். மிகுந்த பொருட்செலவில் உருவாகி இப்படத்தில் ஐஸ்வர்யா ராய், விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ், சரத்குமார் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இவர்கள் என்ன கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர் என்ற பெயர் பட்டியல் சமீபத்தில் வெளியானது குறிப்பிடத்தக்கது.