கவர்ச்தி புயலாக மாறியுள்ள கேத்ரின் தெரசாவின் புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
தமிழ் திரையுலகில் கார்த்தி நடிப்பில் வெளியான ‘மெட்ராஸ்’ படத்தின் மூலம் ரசிகர்களிடையே அறிமுகமானவர் கேத்ரின் தெரசா. இந்த படத்திற்கு பிறகு கதகளி, கணிதன், கடம்பன், கதாநாயகன், கலகலப்பு 2, ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார்.
தமிழில் நடித்து வந்த கேத்ரினுக்கு போதிய வாய்ப்பு இல்லாததால் தெலுங்கு பக்கம் ஒதுங்கினார். அங்கு ஏராளமான ரசிகர்களை கவர்ந்து வரும் கேத்ரின், தற்போது அடுத்தடுத்து படங்களில் பிசியாக நடித்து வருகிறார். மெட்ராஸ் திரைப்படத்திற்குப் பிறகு உச்சபட்ச கவர்ச்சி காட்டி நடித்து வருகிறார். கவர்ச்சியில் தாராளம் காட்டுவதால் தமிழை விட தெலுங்கில் அதிக ரசிகர்களை கொண்டுள்ளார்.
சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் கேத்ரின், தொடர்ந்து தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். அந்த வகையில் தற்போது கவர்ச்சிக்கு ரொம்பவே இடம் கொடுத்துள்ளார். தற்போது அந்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் கேத்ரின்.