ஆப்கானிஸ்தானின் காபூல் விமான நிலையத்திலிருந்து சுமார் 120 பேருடன் இந்தியா புறப்பட்டது விமானம்.
ஆப்கானிஸ்தான் நாட்டின் அரசுக்கும் தாலிபான் அமைப்புக்கும் இடையே நடந்த போர் முடிவுக்கு வந்த நிலையில் நேற்று தலிபான் அமைப்பு நாட்டை கைப்பற்றியது. இதனால் அங்கு வசித்து வந்த மற்ற நாட்டை சேர்ந்தவர்கள் அந்தந்த நாட்டு அரசுகளால் தற்போது மீட்கப்பட்டு வருகின்றனர். ஆப்கானிஸ்தானில் இருந்த 129 இந்தியர்கள் நேற்று ஏர் இந்தியா விமானம் மூலம் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
அத்துடன் ஆப்கானிஸ்தானில் நிலைமை கட்டுக்குள் இல்லாததால் காபூல் விமானநிலையத்தில் மற்ற நாடுகளை சேர்ந்த மக்கள் குவிய தொடங்கினர். இதனால் அங்கு கூட்டத்தை கலைக்க துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. இதில் 5 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியானது. அதேசமயம்ஆப்கானிஸ்தானுக்கான இந்திய தூதர், அதிகாரிகளை திரும்பப் பெற முடிவு செய்துள்ளது மத்திய அரசு.
இந்நிலையில் ஆப்கான் தலைநகர் காபூலில் இருந்து இந்திய தூதரக ஊழியர்கள் உள்பட 120 இந்தியர்களுடன் டெல்லி புறப்பட்டது சிறப்பு விமானம். ஆப்கானிலிருந்து 129 இந்தியர்களை ஏற்கனவே தாயகம் அழைத்து வரப்பட்ட நிலையில் தற்போது 120பேர்களை அழைத்து வந்தது மத்திய அரசு. அத்துடன் ஆப்கானிஸ்தானில் உள்ள இந்தியர்கள் தாயகம் திரும்ப ஆன்லைனில் விசா பெறலாம் என உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.