ஊரடங்கு அமுல்படுத்தப்பட்ட நிலையில் வவுனியா நகரில் முன்னெடுக்கப்பட்ட பரிசோதனையில் இருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
குறிப்பாக வவுனியா நகரின் முக்கிய பகுதிகளில் சுகாதார பரிசோதகர்கள் மற்றும் காவல்துறையினரின் ஏற்பாட்டில் இன்று காலை பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது ஏ9வீதி நீதிமன்றத்திற்கு அருகாமையில் முன்னெடுக்கப்பட்ட பரிசோதனையில் 2 பேருக்கு தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது.
இதனையடுத்து குறித்த இருவரும் தனிமைப்படுத்தல் மையத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர்.