ஆப்கானிஸ்தானில் இருந்து மேலும் 85 இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
ஆப்கானிஸ்தான் நாட்டை தலிபான்கள் கைப்பற்றியுள்ளனர். இஸ்லாமிய மத அடிப்படைவாத இயக்கமான தலிபான் ஆப்கானிஸ்தானில் கைப்பற்றியுள்ளது. அந்நாட்டு மக்கள் மற்றும் உலக நாடுகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தலிபான்கள் மற்றும் ஆப்கானிஸ்தான் ராணுவத்திற்கு இடையே ஏற்பட்ட போரில் வெற்றி பெற்றுள்ளனர். அத்துடன் நாட்டின் அதிபராக இருந்த அஷ்ரப் கனி அங்கிருந்து துபாய்க்கு சென்று விட்டார் மக்கள் சங்கடத்தை அனுபவித்து வரும் நிலையில் அந்நாட்டின் அதிபர் அங்கிருந்து சென்றது விமர்சனத்தை ஏற்படுத்தியது இருப்பினும் மேலும் மக்களை இழக்கக் கூடாது என்பதற்காகவே தான் அங்கிருந்து புறப்பட்டதாக அஷ்ரப் கனி தெரிவித்துள்ளார்.
இந்த சூழலில் ஆப்கானிஸ்தானில் சிக்கியுள்ள மற்றவர்களை மீட்கும் பணி தீவிரமாகியுள்ளது. அந்த வகையில் ஆப்கானிஸ்தானிலிருந்து மேலும் 85 இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளனர். இந்திய விமானப்படை c-130j மூலம் 85 பேரும் தாயகம் திரும்பிக் கொண்டிருக்கின்றனர். ஏற்கனவே இந்திய அதிகாரிகள் தூதர்கள் பொதுமக்கள் என 200-க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்ட நிலையில் தற்போது மேலும் 85 பேர் மீட்கப்பட்டுள்ளனர். இன்னும் 400க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட வேண்டிய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன இருப்பினும் இதுகுறித்து மத்திய அரசு தான் அறிவிக்க வேண்டும்