ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் 150க்கும் மேற்பட்ட இந்தியர்கள் கடத்தப்பட்டதாக வெளியான தகவலுக்கு தலிபான்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர்.
ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியைப் பிடித்துள்ளனர். இதனால் மற்ற உலக நாடுகளும் ஆப்கான் மக்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். இருப்பினும் ஆப்கானில் உள்ள மற்ற நாட்டு அவர்களை மீட்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இந்தியாவைப் பொருத்தவரை முதற்கட்டமாக 200க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்ட நிலையில் இன்று 85 பேர் ஆப்கானிஸ்தானில் இருந்து பத்திரமாக விமானம் மூலம் மீட்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் ஆப்கானிஸ்தான் தலைநகரான காபூல் விமான நிலையம் அருகே 150க்கும் மேற்பட்ட இந்தியர்கள் சிறை பிடிக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடத்தப்பட்ட இந்தியர்களை தாக்கி சித்திரவதை செய்வதாகவும் ஆப்கான் செய்தி ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளது. ஆனால் ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் 150க்கும் மேற்பட்ட இந்தியர்கள் கடத்தப்பட்டதாக வெளியான தகவலுக்கு தலிபான்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர். இந்தியர்கள் யாரும் கடத்தவில்லை என தலிபன் செய்தி தொடர்பாளர் மறுப்பு தெரிவித்துள்ளார் .