More forecasts: 30 day weather Orlando

இந்தியா

  • All News
  • தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது உறுதி : அமைச்சர் அன்பில் மகேஷ்!
தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது உறுதி : அமைச்சர் அன்பில் மகேஷ்!
Aug 21
தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது உறுதி : அமைச்சர் அன்பில் மகேஷ்!

தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்து வரும் நிலையில் பள்ளிகளை திறக்க தமிழக அரசு முடிவெடுத்தது. இதன் காரணமாக 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. பள்ளிகள் திறக்கப்பட்டால் எடுக்கவேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளையும் பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டது. இதனால் பள்ளிகள் திறப்பது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.



பள்ளிகளில் ஒரு நேரத்தில் ஒரு வகுப்பில் 50% மாணவர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும். முதல் நாளில் 50 சதவீத மாணவர்களும் மறுநாளில் 50 சதவீத மாணவர்களும் மாறி மாறி பள்ளிக்கு வரவேண்டும். பள்ளி ஆசிரியர்கள். ஊழியர்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டு இருக்க வேண்டும். பள்ளிக்கு வரும் மாணவர்களுக்கு வைட்டமின் சி மாத்திரை, நோய் எதிர்ப்பு மருந்துகள் வழங்க வேண்டும். அனைத்து வகுப்பறைகளிலும் சனிடைசர் சோப்பு கலந்த நீர் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் உள்ளிட்ட வழிகாட்டு நெறிமுறைகள் குறிப்பிடப்பட்டிருந்தது.



இந்நிலையில் செப்டம்பர் 1 முதல் 9 10 11 12ம் வகுப்புகளுக்கு பள்ளிகளை திறக்க அரசு உறுதியாக இருக்கிறது என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். வகுப்புகளை பாதுகாப்பாக நடத்துவதற்கு நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை வழங்கியிருக்கிறோம். எனவே பள்ளிகள் திறக்கப்படும் என்று கூறிய அவர், மதுரையைத் தொடர்ந்து திருச்சியிலும் கலைஞர் நூலகம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Jan26

 வாட்ஸ்அப் நிறுவனம் சமீபத்தில் பயனர்களின் தனியுரிம

Mar03

பல படங்களிலும் அண்ணன் - தங்கை சம்மந்தப்பட்ட பாசப்பிணை

Sep10

உத்தரகாண்ட் மாநிலத்தில் முதல் மந்திரி புஷ்கர்சிங் தா

Apr08

இலங்கையிலிருந்து ஆபத்தான முறையில் கடல் வழியே இரண்டு க

Jul30

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தலுக்கு இடையே இந்த ஆண்டு

Mar14

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா வைரஸ் தொற்றால

Feb02

இந்தியாவின் சொத்துகளை நட்பு முதலாளிகளிடம் விற்பனை செ

Mar03

பாஜக தேசிய மகளிரணித் தலைவர் வானதி சீனிவாசனுடன் கோவை ச

Mar03

பா.ஜ.க. ஆட்சி நடந்து வருகிற அசாம் மாநிலத்தில் வரும் 27-ந்

Oct10

இந்தியாவிலேயே முதன் முதலில் 146 ஆண்டுகளுக்கு முன்னர் தூ

Jun26

கேரளாவில் கொரோனா பரவல் விகிதம் படிப்படியாக குறைந்து வ

Jun25

தமிழகத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு பதவியேற்ற ப

Aug24

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்துக்கு நாளை (புதன்கிழமை) பிறந

Sep25

தமிழகத்தில் மேலும் 1,733 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய

Feb04

‘இனி தே.மு.தி.க.வுக்கு அரசியலில் ஏற்றமே கிடையாது. இறங்