ஷங்கர் இயக்கும் தெலுங்கு படத்தில் பிரபல நடிகையான தமன்னா இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழின் முன்னணி இயக்குனராக ஷங்கர், தற்போது நேரடி தெலுங்கு படம் ஒன்றை இயக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். இந்த படத்தில் ராம் சரண் ஹீரோவாக நடிக்கவுள்ளார். தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் என 5 மொழிகளில் மெகா பட்ஜெட்டில் உருவாகும் இப்படம் முழுக்க முழுக்க அரசியலை மையமாக வைத்து உருவாகிறது
ராம் சரண் இரட்டை வேடத்தில் நடிக்கவுள்ள இப்படத்தில் பிரபல பாலிவுட் நடிகை கியாரா அத்வானி ஒரு கதாநாயகியாகவும், இன்னொரு கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. அதேபோன்று ஜெகபதி பாபு, பகத் பாசில் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளனர். தமன் இசையில் உருவாகும் இப்படத்தை பிரம்மாண்டமாக தில் ராஜுவின் ஸ்ரீ வெங்கடேஷ்வரா நிறுவனம் தயாரிக்க உள்ளது.
இந்த படத்தை வரும் 2022 சம்மருக்குள் முடித்து வெளியிட பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் துவங்கவுள்ளதால் அடுத்தடுத்த அப்டேட்டுகள் வெளியாகி வருகிறது. ஏற்கனவே நடிகை அஞ்சலி இப்படத்தில் இணைந்துள்ளதாக தகவல் வெளியானது. இந்நிலையில் இப்படத்தில் கெஸ்ட் ரோல் ஒன்றில் நடிக்க தமன்னாவிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. விரைவில் அவர் இந்த படத்தில் இணைவார் என தகவல் வெளியாகியுள்ளது.