நடிகர் பரத் மற்றும் வாணி போஜன் இணைந்து நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு இன்று துவங்கியது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக உள்ள நடிகர் பரத், தற்போது அறிமுக இயக்குனர் சக்திவேல் இயக்கத்தில் நடிக்கிறார். இந்த படத்தில் பரத்துடன் இணைந்து வாணி போஜனும் நடிக்கிறார். கிரைம் திரில்லர் படமாக உருவாகும் இப்படத்தை ஆக்சஸ் பிலிம் பேக்டரி நிறுவனம் தயாரித்து வருகிறது.
இவர்களுடன் கே.எஸ்.ரவிக்குமார், துளசி, ராஜ்குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். படத்தில் பரத் இன்ஜினியராகவும்,, வாணி அவரது மனைவியாகவும் நடிக்கிறார். இந்த படத்தின் ஸ்பெஷல் என்றால், இதில் பாடல்களே இல்லை. முழு கதையும் ஒரு காற்றாலை பண்ணையின் பின்னணியில் அமைக்கப்பட்டுள்ளது
இந்நிலையில் இந்த படத்தின் படப்பூஜை நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதைத்தொடர்ந்து உடனடியாக படப்பிடிப்பையும் படக்குழுவினர் தொடங்கினர். முதற்கட்டமாக தென்காசி பகுதியில் தொடங்கிய படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதையடுத்து அம்பாசமுத்திரம், சென்னை ஆகிய பகுதிகளில் இந்தப் படம் படமாக்கப்பட உள்ளது.