More forecasts: 30 day weather Orlando

உலகம்

  • All News
  • ஆப்கானிஸ்தானில் இருந்து தப்பிச்சென்ற அதிபர் எங்கு உள்ளார்? - வெளியான தகவல்...
ஆப்கானிஸ்தானில் இருந்து தப்பிச்சென்ற அதிபர் எங்கு உள்ளார்? - வெளியான தகவல்...
Aug 19
ஆப்கானிஸ்தானில் இருந்து தப்பிச்சென்ற அதிபர் எங்கு உள்ளார்? - வெளியான தகவல்...

ஆப்கானிஸ்தான்  தலைநகர் காபூலில் தலிபான்கள் நுழைந்ததும் அந்த நாட்டின் அதிபர் அஷ்ரப் கனி  தனது பதவியை ராஜினாமா செய்து விட்டு தனது குடும்பத்துடன் நாட்டை விட்டு தப்பி ஓடினார்.



அவர் மூட்டை மூட்டையாக பணத்தை எடுத்துக்கொண்டு ஹெலிகாப்டரில் தஜிகிஸ்தானுக்கு தப்பி சென்றதாக தகவல்கள் வெளியாகின. அதே சமயம் அவர் கஜகஸ்தான் நாட்டுக்கு சென்றதாக மற்றொரு தரப்பு தகவல்கள் தெரிவித்தன.‌



மேலும், அவர் உஸ்பெகிஸ்தான் நாட்டிற்கு தப்பிச்சென்றுவிட்டதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் கஜகஸ்தான், தஜிகிஸ்தான் மற்றும் உஸ்பெகிஸ்தான் ஆகிய மூன்று நாடுகளுமே  அஷ்ரப் கனி  தங்கள் நாட்டுக்கு வரவில்லை என அதிகாரப்பூர்வமாக அறிவித்தன.



இந்நிலையில்,  அஷ்ரப் கனி  மற்றும் அவரது குடும்பத்தினர் தங்கள் நாட்டில் உள்ளதாக ஐக்கிய அரபு அமீரகம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. ஆப்கானிஸ்தானில் இருந்து தப்பிச்சென்ற அஷ்ரப் கனி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு ஐக்கிய அரபு அமீரகம் அடைக்கலம் கொடுத்துள்ளது.



மனிதாபிமான அடிப்படையில் அஷ்ரப் கனி  மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு அடைக்கலம் கொடுக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய அரபு அமீரகத்தின் வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.



 



 






வரவிருக்கும் நிகழ்வுகள்
Mar03

இங்கிலாந்தில் கண்டுபிடிக்கப்பட்ட உருமாறிய கொரோனா, மற

May28

உலகை இன்றளவும் கதிகலங்க வைத்துவரும் கொரோனா வைரஸ், 2019-ம்

Feb01

மியன்மரில் இராணுவப் புரட்சி ஏற்பட்டுள்ள நிலையில், அந்

Jul01

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் மற்றும் தேசிய வைர

Sep05

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலால் பாதிப்பு அடை

Mar06

இஸ்ரேல் பிரதமர் நஃப்தலி பென்னட், ( Naftali Bennett ) ரஸ்ய ஜனாதிபதி

Sep04