நல்லூர் ஆலயத்தின் வருடாந்த உற்சவம் கொடியேற்றத்துடன் இன்று ஆரம்பமாகவுள்ள நிலையில் நல்லூர் ஆலயத்திற்கு மட்டுப்படுத்தப்பட்டோர் மாத்திரமே அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் நல்லூர் ஆலய முன்வாசலில் கோயில் நிர்வாகத்தினரின் உத்தரவில் காவல்துறையினரின் பேருந்து நிறுத்தப்பட்டுள்ளது.
பொதுமக்கள் கொடியேற்ற நிகழ்வினை பார்க்காதவாறு தடைசெய்யப்பட்டுள்ளது அதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையில் முரண்பாடு ஏற்பட்டுள்ளது