கேரள மாநிலத்தின் சுகாதாரத் துறை மந்திரியான வீணா ஜார்ஜ் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
நடப்பு 2021-ம் ஆண்டில் கேரளாவில் உள்ள 3.54 கோடி பேரில் 50.25 சதவீதம் பேருக்கு (1,77,88,931) கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ் போடப்பட்டு உள்ளது என தெரிவித்துள்ளார்.
மேலும், கடந்த ஜனவரி 16-ம் தேதி கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கியதில் இருந்து 213 நாட்களில் இந்த சாதனை அளவு எட்டப்பட்டு உள்ளது எனவும் தெரிவித்தார்.