மிலிந்த் ராவ் இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் வெளியாகி உள்ள திரைப்படம் ‘நெற்றிக்கண்’. விக்னேஷ் சிவன் தயாரித்திருந்த இப்படம் கடந்த வாரம் நேரடியாக ஓடிடி-யில் வெளியானது. இதில் நடிகை நயன்தாரா கண்பார்வையற்ற பெண்ணாக நடித்திருந்தார். அவரது நடிப்புக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.
இந்நிலையில், நெற்றிக்கண் படம் விரைவில் தெலுங்கில் ரீமேக் ஆக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. முன்னணி தயாரிப்பு நிறுவனம், இப்படத்தின் ரீமேக் உரிமையை கைப்பற்றி உள்ளதாக கூறப்படுகிறது.