நடிகர் மயில்சாமி புது மணத் தம்பதிகளுக்கு பெட்ரோலை அன்பளிப்பாக அளித்துள்ளது வைரலாகி வருகிறது.
இந்தியாவில் நாளுக்கு நாள் பெட்ரோலின் விலை அதிகரித்த வண்ணம் உள்ளது. சில தினங்களுக்கு முன்பு வரை பெட்ரோல் 100 ரூபாய்க்கும் மேல் விற்று வந்தது. சமீபத்தில் தமிழக அரசு பெட்ரோல் மீதான வரியை 3 ரூபாய் குறைந்ததால் பெட்ரோல் விலை மீண்டும் இரட்டை இலக்கத்திற்கு வந்தது.
இந்நிலையில் நடிகர் மயில்சாமி தற்போது திருமண வரவேற்பு நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு, மணமக்களுக்கு பெட்ரோலை பரிசாக அளித்துள்ளார். பெட்ரோல் விலை உயர்வின் மீதான தன்னுடைய எதிர்ப்பை பதிவு செய்யும் வகையில் அவர் இதைச் செய்துள்ளார். அது பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. அந்தப் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
“பெட்ரோல் விலை உயர்வை மத்திய அரசு கண்டுகொள்வதில்லை. மக்களின் கோரிக்கையை அரசுக்கு தெரியப்படுத்துவதற்காகத் தான் இவ்வாறு செய்தேன். தமிழக அரசு பெட்ரோல் விலையை ரூ.3 குறைத்ததை வரவேற்கிறேன்” என்று மயில்சாமி தெரிவித்துள்ளார்.