மாகாணங்களுக்கு இடையில் அமுல்படுத்தப்பட்டுள்ள பயணக் கட்டுப்பாட்டை மீறி பயணிக்க முயற்சிப்போருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என பொலிஸார் அறிவித்துள்ளனர்.
மாகாணங்களுக்கு இடையில் பயணிப்போர் குறித்து ஆராய்வதற்கான இன்று முதல் விசேட பாதுகாப்பு திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
அமுல்படுத்தப்பட்டுள்ள பயணக் கட்டுப்பாட்டை மீறி, மாகாண எல்லைகளை கடக்க முயற்சிப்போரை கைது செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடு நேற்றிரவு முதல் கடுமையாக்கப்பட்டது.
எவ்வாறாயினும், மாகாண எல்லையை கடக்க அனுமதி வழங்கப்பட்டுள்ள அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடுவோரை பரிசோதனைக்கு உட்படுத்த விசேட பாதுகாப்பு திட்டமொன்றும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.