முன்னாள் முதலமைச்சர் கலைஞர் மு.கருணாநிதியின் 3ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, சென்னை மெரினாவில் உள்ள அவரது நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அவரது குடும்பத்தினர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
மேலும், கருணாநிதி நினைவிடத்தில் அமைச்சர்கள் துரைமுருகன், கனிமொழி எம்.பி., ஏ.வ.வேலு, உதயநிதி ஸ்டாலின், எம்.பி.க்கள் மற்றும் தி.மு.க.வினரும் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
சென்னை கோபாலபுரம் இல்லம், சிஐடி காலனி இல்லத்திலும் கருணாநிதி படத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.