More forecasts: 30 day weather Orlando

இந்தியா

  • All News
  • எஸ்.பி.வேலுமணி இல்லம் முன்பு போராட்டம் : 520 பேர் மீது வழக்குப்பதிவு!
எஸ்.பி.வேலுமணி இல்லம் முன்பு போராட்டம் : 520 பேர் மீது வழக்குப்பதிவு!
Aug 11
எஸ்.பி.வேலுமணி இல்லம் முன்பு போராட்டம் : 520 பேர் மீது வழக்குப்பதிவு!

கோவையில் எஸ்.பி.வேலுமணி வீட்டின் முன்பு கூடிய அதிமுகவினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது



அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு தொடர்புடைய 60 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று அதிரடியாக சோதனை நடத்தினர். அப்போது அதிமுகவினர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் நடத்திய சோதனையில் பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தெரிகிறது. சோதனைக்கு பின்னர் வேலுமணி, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளர் ஈபிஎஸ் ஆகியோரை சந்தித்து பேசினார்.



இந்நிலையில் கோவை சுகுணாபுரம் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி இல்லம் முன்பு போராட்டம் நடத்திய அதிமுகவினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கொரோனா கட்டுப்பாடுகளை மீறியது, கொரோனா நோய்த்தொற்று பரப்புதல் உள்ளிட்ட 3 பிரிவின் கீழ் 520 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.இரும்பு தடுப்புகளை அகற்றி ரகளை செய்ததாக 10 பேர் மீதும், போக்குவரத்துக்கு இடையூறு செய்ததாக 2 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.



எம்.எல்.ஏ. விடுதியில் நேற்று எஸ்.பி.வேலுமணியிடம் விசாரணை நடத்தியபோது, அத்துமீறி உள்ளே நுழைய முயன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அதிமுக மாவட்ட செயலாளர் ஆதிராஜாராம் மற்றும் முன்னாள் எம்.பி.வெங்கடேஷ்பாபு உள்ளிட்ட 10 பேர் மீதும் 3 பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Aug15

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள ஒரு கல்வி நிற

Jun14

இங்கிலாந்தில் கார்ன்வாலில் உள்ள கார்பிஸ் பே கடலோர பகு

Dec19

இந்திய சமூக ஜனநாயக கட்சியின் (எஸ்டிபிஐ) மாநில செயலாளர்

Apr03

ராஜஸ்தான் மாநில புத்தாண்டின் முதல் நாளான நேற்று நவ சம

Jan11

தமிழகத்தில் எதிர்வரும் 25ஆம் திகதி வரை  சேவல் சண்டைக்

Mar25

மக்களவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது, ராணுவ இணை மந

Feb01

ஈரானின் சபஹர் துறைமுக அபிவிருத்தி திட்டத்திற்கு இந்த

Apr22

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை தொடர்பாக, சட்டசபை

May12

கிளிநொச்சி - இரணைதீவு கடற்பரப்பில் கடந்த மார்ச் மாதம்

Sep13