More forecasts: 30 day weather Orlando

இந்தியா

  • All News
  • ஈரோட்டில் நேற்று 10 ஆயிரம் பேருக்கு கோவேக்சின் 2-வது டோஸ் தடுப்பூசி!
ஈரோட்டில் நேற்று 10 ஆயிரம் பேருக்கு கோவேக்சின் 2-வது டோஸ் தடுப்பூசி!
Aug 11
ஈரோட்டில் நேற்று 10 ஆயிரம் பேருக்கு கோவேக்சின் 2-வது டோஸ் தடுப்பூசி!

ஈரோடு மாவட்டத்தில் நேற்று 76 இடங்களில் 10 ஆயிரத்து 50 பேருக்கு கோவேக்சின் 2ஆம் டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டது



ஈரோடு மாவட்டத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. தற்போது, கொரோனா தொற்று மீண்டும் படிப்படியாக உயர துவங்கி இருப்பதால், கொரோனா தடுப்பு பணியில் மாவட்ட நிர்வாகம் தீவிரம் காட்டி உள்ளது. அதேசமயம் மக்களை தொற்றில் இருந்து பாதுகாக்க கொரோனா தடுப்பூசி போடும் பணியும் முடுக்கி விடப்பட்டுள்ளது. முதலில் மருத்துவர்கள், செவிலியர்கள், போலீசார் முன் களப் பணியாளர்களுக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்டது.



தற்போது 18 வயதுக்கு மேற்பட்ட பொதுமக்களுக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு வருகிறது. தடுப்பூசி போடப்படும் மையங்களுக்கு முன்பு இரவிலேயே மக்கள் குவியத் தொடங்கி விடுகின்றனர். இதன் காரணமாக டோக்கன் அடிப்படையில் தடுப்பூசி போடப்பட்டு வந்தது. பின்னர், கடந்த மாதம் 24ஆம் தேதி முதல் சுழற்சி முறையில் தடுப்பூசி போடப்பட்ட வந்தது. இதையடுத்து, கடந்த சில நாட்களுக்கு முன்பு வாக்குச்சாவடி அடிப்படையில் அந்தந்த தேர்தல் நிலைய அலுவலர்கள் மூலம் வீடுகளில் டோக்கன் வழங்கப்பட்டு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.



இந்த நிலையில், ஈரோடு மாவட்டத்தில் நேற்று சிவகிரி, மொடக்குறிச்சி, சென்னிமலை, தாளவாடி, சித்தோடு, திங்களூர், நம்பியூர், டி.என்.பாளையம் புளியம்பட்டி, அத்தாணி, மொடக்குறிச்சி, அந்தியூர், கோபி உள்ளிட்ட பகுதிகளிலும், ஈரோடு மாநகராட்சிக்குட்பட்ட 10 இடங்கள் என மொத்தம் மாவட்டம் முழுவதும் 76 ஆரம்ப சுகாதார நிலையங்களில் 10 ஆயிரத்து 50 பேருக்கு கோவேக்சின் 2-ம் டோஸ் தடுப்பு ஊசி செலுத்தப்பட்டது. டோக்கன் அடிப்படையில் 50 முதல் 300 பேர் வரை ஒவ்வொரு வாக்குச் சாவடி மையத்திலும் தடுப்பு ஊசி செலுத்தப்பட்டது. மக்கள் ஆர்வத்துடன் வரிசையில் நின்று தடுப்பூசி செலுத்தி கொண்டனர்.



 






வரவிருக்கும் நிகழ்வுகள்
Jan19

வேளாண் துறையை அழிக்கும் நோக்கத்தில் விவசாய சட்டங்கள்

Jan20

கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான தடுப்பூசி மருந்தை இன்ற

Mar03

பா.ஜ.க. ஆட்சி நடந்து வருகிற அசாம் மாநிலத்தில் வரும் 27-ந்

Aug31

ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியதை தொடர்ந்து ஆசி

Nov04

பிரதமர் மோடி ஒவ்வொரு ஆண்டும் தீபாவளியை, எல்லைப்பகுதிய

Feb20

பெங்களூரு மாநகராட்சி இணை கமிஷனர்கள், உதவி கமிஷனர்கள்

Jan01

நாமக்கல் அருகே புத்தாண்டு விற்பனைக்காக, வீட்டில் விதி

Feb23

வாருங்கள் நாம் அனைவரும் இணைந்து நமக்கான நல்லதோர் த

Mar07

அனுமன் சிலைக்கு முன்பு அரைகுறை ஆடைகளுடன் பெண்கள் கலந்

Jul03

த.மா.கா.வில் இருந்து மாநில நிர்வாகிகள், மாவட்ட தலைவர்கள

Jun30

தாம்பரம் சானடோரியத்தில் உள்ள அரசு நெஞ்ச நோய் மருத்துவ

Dec17

சென்னை கோடம்பாக்கத்தை சேர்ந்த 21வயது பெண் கிண்டியில் உ

Jun19

முன்னாள் தடகள வீரர் மில்கா சிங் (91), கடந்த மாதம் கொரோனா த

Mar13

சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, நீலகிரி மாவட்டத்தில் தேர

Jun06

கொரோனா பரவல் காரணமாக மத்திய அரசு சி.பி.எஸ்.இ. மாணவர்களு