நியூயார்க் மாகாண கவர்னர் ஆண்ட்ரூ கியூமோ தன்னிடம் தகாத முறையில் பேசியதாக அவரது இரு உதவியாளா்கள் அடுத்தடுத்து பாலியல் புகார் தெரிவித்திருந்தனா். அதனைத் தொடா்ந்து வெள்ளை மாளிகை புகைப்படக் கலைஞராக இருந்த அன்னா ருச் என்ற பெண் நிகழ்ச்சி ஒன்றில் தனது விருப்பமின்றி கியூமோ தன்னை அத்துமீறி தொட்டதாக குற்றம் சாட்டியுள்ளார்.
அனா லிஸ் என்ற 35 வயது பெண் உள்பட பலர் ஆண்ட்ரூ கியூமோ மீது பாலியல் குற்றச்சாட்டை சுமத்தி உள்ளது அவரது கவர்னர் பதவிக்கு நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது.
அவர் சார்ந்த ஜனநாயகக் கட்சி எம்.பி.க்கள் மற்றும் பெரும்பாலான எம்.எல்.ஏ.க்கள் தனது ஆதரவை விலக்கிக் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், பாராளுமன்றத்தின் செனட் பெரும்பான்மை தலைவா் சர் ஷுமர் மற்றும் செனட் உறுப்பினா் கிறிஸ்டன் கில்லிபிராண்ட் ஆகியோர் ஆண்ட்ரூ கியூமோ பதவி விலக வேண்டுமென்று வலியுறுத்தி வந்தனர்.
இந்நிலையில், நியூயார்க் மாகாண கவர்னரான ஆண்ட்ரூ கியூமோ தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.