More forecasts: 30 day weather Orlando

இந்தியா

  • All News
  • காஷ்மீருக்கான மாநில அந்தஸ்தை பெற போராடுவேன் - ராகுல் காந்தி
காஷ்மீருக்கான மாநில அந்தஸ்தை பெற போராடுவேன் - ராகுல் காந்தி
Aug 11
காஷ்மீருக்கான மாநில அந்தஸ்தை பெற போராடுவேன் - ராகுல் காந்தி

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி 2 நாட்கள் சுற்றுப்பயணமாக காஷ்மீர் சென்றார்.



சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட பிறகு முதல் முறையாக ராகுல் காந்தி நேற்று ஸ்ரீநகர் சென்றார். ஸ்ரீநகரில் புதிதாக கட்டப்பட்டுள்ள் கட்சி அலுவலகத்தை திறந்து வைத்து பேசியதாவது:



எங்கள் குடும்பம் டெல்லியில் வசிக்கிறது. அதற்கு முன் அலகாபாத்திலும், அதற்கு முன் காஷ்மீரிலும் வசித்து வந்தது. காஷ்மீரிகளின் பழக்க வழக்கங்கள், சிந்தனை ஓட்டம் ஆகியவை என்னிடமும் உள்ளது.



பாராளுமன்றத்தில் காஷ்மீர் விவகாரம், பெகாசஸ் விவகாரம் குறித்து பேச முயற்சித்த போதெல்லாம், எதிர்க்கட்சிகளை பேச அனுமதிப்பதில்லை. காஷ்மீர் பிரச்சினையை அன்பு மற்றும் ஈடுபாட்டின் மூலம் வேறு வழியில் தீர்க்க முயற்சித்தோம். ஆனால் பா.ஜ.க. அனைத்தையும் சிதைத்து விட்டது. காஷ்மீர் மக்கள் காயப்படுத்தப்பட்டுள்ளனர் என்பதை நான் அறிவேன்.



அன்பு மற்றும் புரிதலின் உறவை நான் விரும்புகிறேன். நான் உங்களுக்குத் துணை நிற்பேன், உங்களுக்கான மாநில அந்தஸ்தைப் பெற நான் போராடுவேன். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு காஷ்மீர் வரும் போது நான் விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டேன்.  தற்போது நான் ஜம்மு மற்றும் லடாக் பகுதிகளில் சுற்றுப்பயணம் செய்கிறேன். இது ஓர் ஆரம்பம். நான் மீண்டும் மீண்டும் வருவேன் என தெரிவித்தார்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Feb20

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு வெகுவாக குறைந்துள்ள நிலை

Mar05

தனது செல்ல நாயுடன் உக்ரைனில் இருந்து நாடு திரும்பியுள

Apr19

இந்தியாவில் கொரோனா பரவல் தீவரமடைந்துள்ள நிலையில், நாள

Jul30

கர்நாடக மாநில புதிய முதல் மந்திரி பசவராஜ் பொம்மை நேற்

Feb02

இந்தியாவில் வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி

Mar31

இந்தியாவின் மத்தியபிரதேசத்தை சேர்ந்தவர் ஜாவ்ரா. இவரு

Aug18

சட்டப்பேரவையில் பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் பேசும் ப

Dec29

தமிழகத்தில்  வடகிழக்குப் பருவ மழையினால் ஏற்பட்ட பாத

Apr08

 மேலும்  சென்னையில் காய்ச்சல் பரிசோதனை முகாம்களை அ

Aug12