தனியார் தொலைக்காட்சியில் வலம் வந்த பூஜா ராமசந்திரன், காதலில் சொதப்புவது எப்படி, பீட்சா, காஞ்சனா 2, நண்பேன்டா உள்ளிட்ட தமிழ் படங்களிலும், ரா, தேவி ஸ்ரீ பிரசாத், லா, தொச்சாய் உள்ளிட்ட தெலுங்கு படங்களிலும் சில மலையாள படங்களிலும் நடித்துள்ளார்.
சமீபத்தில் வெளியான அந்தகாரம் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். இந்நிலையில், பூஜா ராமச்சந்திரன் சமீபத்தில் போட்டோ ஷூட் ஒன்றை நடத்தியுள்ளார். இதன் புகைப்படங்களை அவரது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்திருந்தார். அந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.