காங்கிரஸ் முன்னாள் தலைவரும், வயநாடு தொகுதி எம்.பி.யுமான ராகுல் காந்தி 2 நாள் சுற்றுப்பயணமாக ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசம் சென்றுள்ளார்.
இந்தப் பயணத்தின்போது ஜம்மு காஷ்மீர் காங்கிரஸ் தலைவர் குலாம் அகமதுவின் மகனின் திருமண நிகழ்ச்சியில் ராகுல் காந்தி பங்கேற்கிறார். மேலும், அவர் காஷ்மீரில் காங்கிரஸ் கட்சியின் தலைமையத்தை திறந்துவைக்கிறார்.
அதனை தொடர்ந்து காங்கிரஸ் கட்சி தலைவர்கள் மற்றும் தொண்டர்களுடன் அவர் கலந்துரையாடுகிறார். ராகுல் காந்தியின் காஷ்மீர் பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.