இந்திய வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ளதாவது:
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் இன்று (9-ம் தேதி) வீடியோ கான்பரன்சிங் மூலம் நடைபெற உள்ளது.
இந்தக் கூட்டத்தில் ரஷ்யா உள்ளிட்ட பல்வேறு நாட்டின் தலைவர்கள் வீடியோ கான்பரன்சிங் மூலம் கலந்து கொள்கின்றனர். ரஷ்யா நாட்டின் சார்பாக அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புதின் பங்கேற்கிறார்.
கடல்சார் பாதுகாப்பை மேம்படுத்துதல் மற்றும் அது தொடர்பான சர்வதேச ஒத்துழைப்பு குறித்து இந்தக் கருத்தரங்கில் விவாதிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.