More forecasts: 30 day weather Orlando

இந்தியா

  • All News
  • ஊரடங்கில் புதிய கட்டுப்பாடுகள்; இன்று முதல் அமலாகிறது!
ஊரடங்கில் புதிய கட்டுப்பாடுகள்; இன்று முதல் அமலாகிறது!
Aug 08
ஊரடங்கில் புதிய கட்டுப்பாடுகள்; இன்று முதல் அமலாகிறது!

கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த சேலம் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.



தமிழகத்தில் படிப்படியாக குறைந்து வந்த கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக மீண்டும் அதிகரித்துள்ளது. மூன்றாம் அலை எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருப்பதால் பாதிப்பு குறைவாக இருக்கும் போதே கட்டுக்குள் கொண்டு வருமாறு மாவட்ட நிர்வாகங்களுக்கு முதல்வர் மு.க ஸ்டாலின் அறிவுறுத்தினார். அதன் படி கோவை, சென்னை, திருப்பூர், பெரம்பலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கட்டுப்பாடுகள் கடுமையாக பட்டுள்ளன.



இந்த நிலையில், ஈரோடு மாவட்டத்திலும் புதிய கட்டுப்பாடுகளை விதித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார். அதன் படி, அனைத்து கடைகளும் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே செயல்படும் என்றும் தேநீர் கடைகள் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை பார்சல் சேவைகளுடன் இயங்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உணவகங்களும் காலை 6 மணி முதல் 5 மணி வரை 50% வாடிக்கையாளர்களுடன் இயங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறைகள் இன்று முதல் அமல் படுத்தப் படுகின்றன.



சேலம் மாவட்டத்தில் ஜவுளி கடைகள், நகைக் கடைகள், வணிக வளாகங்கள் மாலை 6 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதி வழங்கப்படுகிறது. வணிக நிறுவனங்கள் ஞாயிற்றுக்கிழமையில் செயல்பட அனுமதி இல்லை. பூ, பழம், காய்கறி உள்ளிட்ட கடைகள் மாலை 6 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதி அளிக்கப்படுகிறது. வாரச் சந்தைகள் ஆகஸ்ட் 23-ஆம் தேதி வரை செயல்பட தடை விதிக்கப்படுகிறது.



 


 



 





வரவிருக்கும் நிகழ்வுகள்
Mar27

எதிர்வரும் சட்டமன்ற தேர்தல் அதிமுக வேட்பாளர்கள் மற்ற

Jul26

பெகாசஸ் எனப்படும் இஸ்ரேல் நாட்டின் உளவு அமைப்பு மூலம்

Oct09

இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடி கார

Nov03

இந்தியாவில் புதிதாக 11,903 பேர் 

தமிழக தேர்தல் களம் உச்சக்கட்ட பரபரப்பை நெருங்கிவருகி

Jul03

திருப்பதி அருகே உள்ள புங்கனூர் அலிபிரி சாலையை சேர்ந்த

Jul27

மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமின் நினைவுதினம்

Apr19

மேற்கு வங்காளத்தில் தேர்தல் பிரசாரம் மற்றும் வாக்குப

Oct24

பிரதமர் மோடி ஆண்டு தோறும் எல்லையில் பாதுகாப்பு பணியில

May23

தளர்வுகளற்ற பொதுமுடக்கம் நாளை அமலுக்கு வருவதையொட்டி,

Feb09

கடற்றொழிலாளர்களின் பிரச்சினைக்கு நீண்டகாலத் தீர்வு

Jan25

அ.தி.மு.க.வின் முன்னாள் பொதுச் செயலாளர் சசிகலா எதிர்வரு

Mar09

கேரளாவில் கம்யூனிஸ்டு கூட்டணி, காங்கிரஸ் கூட்டணி இடைய

Aug18