More forecasts: 30 day weather Orlando

உலகம்

  • All News
  • தடுப்பூசி செலுத்திக் கொண்டால் 100 டாலர் பரிசு - நியூயார்க் மேயர் அறிவிப்பு
தடுப்பூசி செலுத்திக் கொண்டால் 100 டாலர் பரிசு - நியூயார்க் மேயர் அறிவிப்பு
Jul 30
தடுப்பூசி செலுத்திக் கொண்டால் 100 டாலர் பரிசு - நியூயார்க் மேயர் அறிவிப்பு

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தலைமையிலான அரசு, அமெரிக்காவில் கொரோனாவைக் கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் அமெரிக்காவில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் மிக வேகமாக நடைபெற்று வருகின்றன. 



தடுப்பூசி செலுத்துவதால் அமெரிக்காவில் கொரோனாவின் தாக்கம் ஓரளவு கட்டுக்குள் வந்திருப்பதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.



இதற்கிடையே, அமெரிக்காவில் கடந்த சில தினங்களாக மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. புளோரிடா, கலிபோர்னியா, டெக்சாஸ், லூசியானா ஆகிய மாகாணங்களில் தினசரி பாதிப்பு அதிகமாக இருந்துவருகிறது. டெல்டா வகை வைரஸ் பரவல் மீண்டும் தொற்று அதிகரிப்புக்கு காரணம் என்று கூறப்படுகிறது.



இதையடுத்து, தடுப்பூசி செலுத்திக் கொள்வதற்காக மக்களை ஊக்கப்படுத்த அந்நாட்டு அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.



இந்நிலையில், நியூயார்க்கில் தடுப்பூசி போட்டுக் கொள்பவர்களுக்கு 100 டாலர் பரிசு கிடைக்கும் என அந்நகர மேயர் டெ பிளாசியோ அறிவித்துள்ளார். ஜூலை 30 முதல் செப்டம்பர் 2-வது வாரத்திற்குள் முதல் டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொள்ளும் நியூயார்க் மக்களுக்கு 100 டாலர் பரிசு கிடைக்கும் என அவர் கூறியுள்ளார். 



மேலும், செப்டம்பருக்குள் தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்களுக்கு வாரம்தோறும் பரிசோதனை செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.



நியூயார்க்கில் இதுவரை 66 சதவீதம் பேர் இரண்டு டோஸ் தடுப்பூசிகளும், 71 சதவீதம் பேர் ஒரு டோஸ் தடுப்பூசியும் போட்டுக் கொண்டிருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Sep22

உக்ரைனில் போரிட ஆயிரக்கணக்கான கூடுதல் துருப்புக்களை

Mar12

இந்தோனேசியாவில் மேற்கு ஜாவா மாகாணத்தில் சுபாங் என்ற இ

Nov16

இங்கிலாந்தில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் சமீப காலமாக த

May27

தமிழில் கடந்த 2001-ம் ஆண்டு வெளியான ஆனந்தம் படம் மூலம் இய

Mar14

அமெரிக்காவின் மினசோட்டா மாகாணத்தின் மினியாபோலீஸ் நக

Jan26

நெதர்லாந்தில் கொரோனாத் தொற்றுப் பரவல் காரணமாக  நீடி

Feb23

அணு ஆயுத ஒப்பந்தத்தில் இருந்து விலகியதன் மூலம் ரஷ்யா

Mar20

துனிசியாவில் இருந்து கடந்த வெள்ளிக்கிழமை சென்ற புலம்

Jul25

உலக அளவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின்

Jun24