நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனையை அனுபவித்து வரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க, நேற்று தனது நெருங்கிய உறவினர் ஒருவரின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ரஞ்சன் ராமநாயக்கவின் உறவினரின் கோரிக்கைக்கு அமைய இறுதிச் சடங்கில் கலந்துகொள்ள நீதிமன்றம் விசேட அனுமதி வழங்கியதையடுத்து அவர் குறித்த நிகழ்வில் கலந்துகொண்டுள்ளார்.
அவரது மைத்துனர் ஒருவரின் தாய் உயிரிழந்ததைத் தொடர்ந்து, நீர்கொழும்பு பிரதேசத்தில் உள்ள மரண வீடொன்றுக்கே அவர் இவ்வாறு அழைத்து வரப்பட்டார்.