More forecasts: 30 day weather Orlando

இந்தியா

  • All News
  • மேகதாது விஷயத்தில் பாஜக இரட்டை வேடம் போடுகிறது - கமல்ஹாசன்
மேகதாது விஷயத்தில் பாஜக இரட்டை வேடம் போடுகிறது - கமல்ஹாசன்
Aug 04
மேகதாது விஷயத்தில் பாஜக இரட்டை வேடம் போடுகிறது - கமல்ஹாசன்

கோவையில் கமல்ஹாசன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:



நேர்மையாக எங்களுக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி. அவர்களுக்கும் ஜனநாயகத்திற்கும் வணக்கம் தெரிவிக்க கோவை வந்துள்ளேன்.



கோவையில் மக்களை நான் சந்தித்து நன்றி கூற இருந்த நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டது மக்களை எண்ணித்தான். மக்களின் நலன் பார்த்தே ஆளுங்கட்சி செயல்பட்டு வரும் நிலையில் அழுத்தம் எதுவும் கொடுக்கவில்லை.



கொங்கு நாடு அரசியல் கோஷம் மட்டுமே, மக்கள் தேவை அல்ல. கோவை மக்களுக்கு திட்டங்களில் பிரிவினை பார்க்கப்படுகிறது. உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் பங்கு மட்டுமே இருக்க வேண்டும்.



மேலும் கிழக்கிந்திய கம்பெனி போல, வடக்கில் பா.ஜ.க. எனும் வடக்கிந்திய கம்பெனி தயாராகி வருகிறது. மேகதாது விஷயத்தில் பா.ஜ.க இரட்டை வேடம் போடுகிறது.



கொரோனா நடவடிக்கையில் ஆளுங்கட்சி முடிந்ததை செய்கிறது. இன்னும் அதிகமாக, தீவிரமாக செயல்பட வேண்டும்.



தோல்வியை சினிமாவிலும் கற்றிருக்கிறேன். கோவை மக்கள் எங்களுக்கு நம்பிக்கையை அளித்துள்ளார்கள். இழந்த அரசியல் மாண்பை மீட்டெடுப்பது எங்கள் பணி. தேர்தலின்போது கொடுத்த வாக்குறுதிகளை ஏமாற்றுவது தமிழகத்தில் உள்ள கட்சிகளுக்கு புதிதல்ல. பென்னி குயிக் சிலையை இடமாற்றுவதை அரசு கைவிட வேண்டும் என்றார்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Feb04

தமிழகத்தில் ஜனவரியில் பெய்த மழையால் பாதிக்கப்பட்ட பய

Jul20

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 30,093 பேருக்கு 

சட்டசபை தேர்தலை எதிர்நோக்கி உள்ள கேரளாவில் காங்கிரசி

Jan26

போராட்டத்தில் வன்முறை சூழுமானால், அரசின் திசைதிருப்ப

Jun23