More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • நாட்டின் பல இடங்களில் மழை பெய்யக் கூடிய சாத்தியம்!
நாட்டின் பல இடங்களில் மழை பெய்யக் கூடிய சாத்தியம்!
Aug 02
நாட்டின் பல இடங்களில் மழை பெய்யக் கூடிய சாத்தியம்!

சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.



ஊவா மாகாணத்திலும் மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.



மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-50 கிலோ மீற்றர் வரை அதிகரித்த வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது



மழை நிலைமை: களுத்துறையிலிருந்து காலி வரையான கடற்பரப்புகளில் சிறிதளவில் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.



காற்று : நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது தென்மேற்கு முதல் மேற்கு வரையான திசைகளிலிருந்து வீசக்கூடும்.



காலியிலிருந்து மாத்தறை மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளிலும் புத்தளத்திலிருந்து மன்னார் ஊடாக காங்கேசந்துறை வரையான கடற்பரப்புகளிலும் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோ மீற்றர் வரை காணப்படும்.



மேற்குறிப்பிட்ட கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 60 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.



நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 20-30 கிலோ மீற்றர் வரை காணப்படும்.



கடல் நிலை : காலியிலிருந்து மாத்தறை மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளும் புத்தளத்திலிருந்து மன்னார் வரையான கடற்பரப்புகளும் அவ்வப்போது கொந்தளிப்பாகக் காணப்படும். புத்தளத்திலிருந்து கொழும்பு ஊடாக காலி வரையான கடற்பரப்புகள் அவ்வப்போது ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும்.



கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் இவ்விடயம் தொடர்பாக அவதானமாக இருக்குமாறு வேண்டிக் கொள்ளப்படுகிறீர்கள்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
May20

பொதுச் செலவினங்களை எளிதாக்கும் நோக்கில், அரசாங்கத்தி

May10

இலங்கையில் ஏற்பட்டுள்ள வன்முறைகள், அபிவிருத்தி பங்கா

Jan27


எதிர்வரும் 31ம் திகதி வரை மின்சாரம் துண்டிக்கப்படாத

Mar07

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக் குழ

May03

அலரி மாளிகைக்கு எதிரில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அம

Sep26

நாளை புதன்கிழமையும் இரண்டு மணி நேரம் 20 நிமிடம் மின்வெட

Oct14

நாட்டின் ஆறு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்க

Mar25

நாட்டில் இன்று ஒரு தெளிவான கொள்கையும் திட்டமும் செயற்

Feb04

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழ

Feb13

இலங்கையில் சமகாலத்தில் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடி தொ

Jun03

முல்லைத்தீவு மாவட்டத்தில் அரசாங்கத்தினால் வழங்கப்பட

May25

ஒரு ட்ரில்லியன் ரூபா பணம் அச்சிடப்பட வேண்டியிருப்பதா

Feb04

இலங்கை - இந்திய கடற்றொழிலாளர்களை  மோதவிட்டு ராஜபக்ச

Mar21

நாள்தோறும் இலங்கையில் ஏதாவதொரு பொருளின் விலை பாரியளவ

Feb28

கொழும்பில் நில மதிப்புகள் 2020 ஆம் ஆண்டின் இரண்டாம் பாதி