More forecasts: 30 day weather Orlando

இந்தியா

  • All News
  • இந்தியாவில் குறைந்து வரும் கொரோனா : ஒரே நாளில் 30,093 பேருக்கு தொற்று!
இந்தியாவில் குறைந்து வரும் கொரோனா : ஒரே நாளில் 30,093 பேருக்கு தொற்று!
Jul 20
இந்தியாவில் குறைந்து வரும் கொரோனா : ஒரே நாளில் 30,093 பேருக்கு தொற்று!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 30,093 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.



இந்தியாவில் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. அதே சமயம் கொரோனா மூன்றாம் அலை வராமல் தடுக்க அனைத்து நடவடிக்கைகளையும் மாநில அரசுகள் மேற்கொள்ள மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில் இந்தியாவில் ஒரேநாளில் 30,093 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதன் மூலம் கொரோனா பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 3,11,74,322 ஆக அதிகரித்துள்ளது. அத்துடன் கடந்த 24 மணிநேரத்தில் 374 பேர் கொரோனாவால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் கொரோனாவால் பலியானோர் மொத்த எண்ணிக்கை 4,14,482 ஆக உயர்ந்துள்ளது.



இந்தியாவில் மொத்தம் 4,06,130 பேர் கொரோனாவுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர். அதே சமயம் கடந்த 24 மணிநேரத்தில் , 45,254 பேர் கொரோனாவிலிருந்து மீண்டுள்ளனர். இதன் மூலம் இதுவரை இந்தியாவில் கொரோனாவிலிருந்து மீண்டோர் எண்ணிக்கை 3,03,53,710 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல் கொரோனாவிலிருந்து தப்பிக்கும் ஆயுதம் என்று சொல்லப்படும் கொரோனா தடுப்பூசி 41,18,46,401 பேருக்கு செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.நேற்று இந்தியாவில் 38,164 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் இன்று தொற்று பாதிப்பு 30,093ஆக குறைந்துள்ளது மாநில அரசுகளின் கொரோனா தடுப்பு நடவடிக்கை மற்றும் பொதுமக்களின் ஒத்துழைப்பை காட்டுகிறது.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Sep11

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்த லட்சுமி நகர் பகுத

Mar08

அரச பேருந்து ஓட்டுனரை வழிமறித்து தாக்கிய நான்கு பேரை

Oct24

இந்திய சினிமா துறையில் வாழ்நாள் சாதனையாளர்களுக்கு வழ

Aug16

சென்னை சத்தியமுர்த்தி பவனில் உள்ள 150 அடி உயர கோடி கம்பத

Jun15

சென்னையை அடுத்த கேளம்பாக்கத்தில் செயல்பட்டு வரும் சு

Jul29

பயிர் காப்பீட்டு திட்டம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோ

May28

வங்க கடலில் உருவான ‘யாஸ்’ புயல், அதி தீவிர புயலாக வல

Jun30

கர்நாடக காங்கிரஸ் தலைவராக ஆர்.வி.தேஷ்பாண்டே இருந்த போ

Feb26

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சட்டசபையில் இன்று 110-வது

Dec11

திருப்பதி ஏழுமலையானுக்கு 5.3 கிலோ எடை கொண்ட  தங்கக்

May02

தமிழகத்தில் 234 சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் கடந்த ஏ

Oct03

தமிழகத்தில் தடுப்பூசி போடுவதை விரைவுபடுத்த மெகா தடுப

Feb24

மும்பையில் இளம்பெண் கொலை வழக்கில் மகனை தந்தையே காட

Mar04

‛உக்ரைனில் இருந்து வெளியேற இந்தியர்களுக்கு மத்திய அர

Feb02

இந்தியாவின் சொத்துகளை நட்பு முதலாளிகளிடம் விற்பனை செ