தமிழர்களுக்கான அரசியல் தீர்வைப் பொறுத்தவரை, மாகாணசபை முறைமை என்பது முழுமையாகத் தோல்வியடைந்துள்ளது என்பதே தனது நிலைப்பாடு என முன்னாள் நிதியமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது,
மாகாணசபை முறைமையானது தற்போது தெற்கிலுள்ள அரசியல்வாதிகளுக்கான வரப்பிரசாதங்களை வழங்க கூடியவாறான வெள்ளை யானையாக மாறியிருக்கின்றது
அதுமாத்திரமன்றி சர்வதேச அழுத்தங்கள் ஏற்படக்கூடும் என்பதால் காணாமல் போனோர் பற்றிய அலுவலகத்தையும் அதுகுறித்த சட்டத்தையும் தற்போதைய அரசாங்கம் முழுமையாக இல்லாதொழிக்காமல் இருக்கிறது
தற்போது அந்த அலுவலகத்திற்கான நிதி வழங்கல் நிறுத்தப்பட்டிருப்பதன் காரணமாக அவ்வலுவலகம் இருந்தும் இல்லாத நிலையை அடைந்துள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.