70-களின் பின்னணியில் குத்துச்சண்டை விளையாட்டை மையப்படுத்தி வெளிவந்துள்ள ‘சார்பட்டா பரம்பரை’ திரைப்படம் சார்பட்டா பரம்பரை. இப்படத்தை இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கியுள்ள நிலையில் படத்தில் நடிகர் ஆர்யா, பசுபதி, துஷாரா விஜயன், கலையரசன், ஜான் விஜய், ஜான் கொக்கன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகி மிகப்பெரிய கவனத்தை இப்படம் ஈர்த்துள்ளது.
குத்துச்சண்டை, எமர்ஜென்சிகாலம், மிசா, திமுக ஆட்சி, கைதுகள், ஆட்சிகலைப்பு, கட்சிமாறல்கள் உள்ளிட்ட அனைத்தும் கண்முன் மீண்டும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த படத்தை பார்த்த திரை பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் இதை கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில் சார்பட்டா படத்தில் எம்ஜிஆரை தவறாக சித்தரித்துள்ளது மிகுந்த வருத்தமளிக்கிறது; கண்டிக்கத்தக்கது என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். திமுகவின் பிரச்சார படமாகவே முழுக்க முழுக்க சார்பட்டா இருக்கிறது. எம்ஜிஆருக்கும் விளையாட்டுத் துறைக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பது போல காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன.விளையாட்டை விடாப்பிடியாய் கைக்கொண்ட எம்ஜிஆர் எத்தனையோ வீரர்களை ஊக்குவித்தவர். கலை மூலம் உண்மைகளை மறைப்பது வருங்கால தலைமுறைக்கு செய்யும் துரோகம் என்று தெரிவித்துள்ள ஜெயக்குமார் , பா ரஞ்சித்தின் சார்பட்டா படம் திமுகவுக்கு ஆதரவாக இருப்பதாகக் கூறப்படும் நிலையில் படத்துக்கு எதிராக அறிக்கை வெளியிட்டுள்ளார்.