More forecasts: 30 day weather Orlando

இந்தியா

  • All News
  • தமிழ்நாட்டின் வனப்பரப்பை 33 சதவீதமாக உயர்த்த நடவடிக்கை - முக ஸ்டாலின் வலியுறுத்தல்!
தமிழ்நாட்டின் வனப்பரப்பை 33 சதவீதமாக உயர்த்த நடவடிக்கை - முக ஸ்டாலின் வலியுறுத்தல்!
Jul 23
தமிழ்நாட்டின் வனப்பரப்பை 33 சதவீதமாக உயர்த்த நடவடிக்கை - முக ஸ்டாலின் வலியுறுத்தல்!

சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டப் பணிகள் குறித்தும், அடுத்த 10 ஆண்டுகளில் இத்துறைகளில் தொலைநோக்குடன் செயல்படுத்தப்பட வேண்டிய திட்டங்கள் குறித்தும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் 22-ந் தேதி (நேற்று) தலைமைச் செயலகத்தில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-



மரம் நடுதல் திட்டத்தைத் தீவிரப்படுத்தி தமிழ்நாட்டின் வனப்பரப்பை 33 சதவீதமாக உயர்த்துவதற்கு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். மனிதர்கள், வனவிலங்குகளுக்கு இடையேயான மோதல்களைக் கட்டுப்படுத்துவதற்கான உரிய வழிமுறைகளை மேற்கொள்ள வேண்டும்.



வனப்பாதுகாப்பைப் பொறுத்தவரையில், தமிழ்நாட்டில் உள்ள 3 உயிர்க்கோள் காப்பகங்களான நீலகிரி உயிர்க்கோள் காப்பகம், மன்னார் வளைகுடா உயிர்க்கோள் காப்பகம் மற்றும் அகஸ்தியர் மலை உயிர்க்கோள் காப்பகம் ஆகியவற்றை மேம்படுத்தவும், சிறப்பாக பராமரிக்கவும் வேண்டும்.



தமிழ்நாட்டிலுள்ள வன உயிரின சரணாலயங்கள், புலிகள் காப்பகங்கள் போன்ற பாதுகாப்பு வனப்பகுதிகளில் உள்ள வன உயிரினங்களை பாதுகாப்பது தொடர்பான வழிமுறைகளைக் கண்டறிய வேண்டும். விலங்குகளை வேட்டையாடுவதைத் தடுக்கவும், வனக் குற்றங்களைத் தடுக்கவும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.



மாநிலத்தில் உள்ள பறவைகள் சரணாலயம், புலிகள் சரணாலயம், உயிரியல் பூங்காக்கள் ஆகியவற்றில் தற்போது உள்ள கட்டமைப்பு வசதிகளை மேலும் மேம்படுத்த வேண்டும். காலநிலை மாற்றத்தைப் பொறுத்த வரையில், தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள தாக்கங்கள் மற்றும் பாதிப்புகளை குறைப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.



தொழில்துறையினருக்குச் சுற்றுச்சூழல் அனுமதி வழங்குவதில் வெளிப்படைத்தன்மையுடன் செயல்பட வேண்டும். பொதுமக்கள் மற்றும் இளைய தலைமுறையினரைச் சுற்றுச்சூழலை மேம்படுத்தும் நடவடிக்கைகளில் அதிக அளவு ஈடுபடுத்த வேண்டும். தொழிற்சாலைகள் மூலம் நீர், நிலம், காற்று மாசுபடுதலைத் தடுப்பது, குறைப்பது மற்றும் கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.



தமிழ்நாடு தேயிலைத் தோட்டக்கழகம், தமிழ்நாடு வனத் தோட்டக் கழகம், அரசு ரப்பர் கழகம் ஆகியவற்றின் மேம்பாட்டுப் பணிகள் குறித்தும் முதல்-அமைச்சர் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வுக் கூட்டத்தில் அமைச்சர்கள் கா. ராமச்சந்திரன், சிவ.வீ.மெய்யநாதன், தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு, நிதித்துறைக் கூடுதல் தலைமைச் செயலாளர் ச.கிருஷ்ணன், சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை முதன்மைச் செயலாளர் சுப்ரியா சாகு,



முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் அசோக் உபரேதி, சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் சிறப்புச் செயலாளர் எம்.ஜெயந்தி, முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் மற்றும் தலைமை வன உயிரினக் காப்பாளர் சேகர் குமார் நீரஜ், வனத்துறைச் சிறப்புச் செயலாளர் கே.ராஜ்குமார், சுற்றுச்சூழல்துறை இயக்குநர் பொ.ராஜேஸ்வரி, தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் உறுப்பினர் செயலாளர் செல்வன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.



இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Mar11

தமிழக அரசு பணியில் இருந்து ஐ.ஏ.எஸ். அதிகாரி உ.சகாயம் கடந

Oct02

தமிழகத்திலும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு 2 மண்டலங்களாக பிரிக்

Mar08

உக்ரைன் தலைநகரை கைப்பற்றும் நோக்கில் ரஷ்யா, உக்ரைன் ம

Nov27

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கவர்னரை நேரில் சந்தித்து,

Mar06

விழுப்புரம் மாவட்டத்தில் வாக்குச் சவாடிகளுக்கு அனுப

Apr21

போர்க்கால அடிப்படையில் மாநில அரசுகளுக்கு ஆக்சிஜன் சி

Jun18

மேற்கு வங்காள கவர்னராக ஜெக்தீப் தாங்கர் கடந்த 2019-ம் ஆண்

Mar09

இளைஞர்கள் இடையே மோதலில் பொறியியல் பட்டதாரி அடித்துக்

Aug03

இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் உள்ள கோவில்களில் கடந

Feb24

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கடந்த ஆண்டு ஜனவரி 22-ந் தேதி

Apr30

இலங்கை தமிழர்கள் குறித்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டா

Jul29

அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி ஆண்டனி பிளிங்கன், 2 ந

May30

கல்வி உரிமை தான் பெண்களின் உரிமை எனவும், பெண்கள் தன்னம

Aug27

நடிகர் கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் என்ற பெயரில் கட்ச

May13

நாடு முழுவதும் கொரோனா 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. இத