More forecasts: 30 day weather Orlando

சினிமா

  • All News
  • புதுவித முயற்சியில் ஹன்சிகாவின் த்ரில்லர் படம்.. விரைவில் அறிவிப்பு!
புதுவித முயற்சியில் ஹன்சிகாவின் த்ரில்லர் படம்.. விரைவில் அறிவிப்பு!
Jul 21
புதுவித முயற்சியில் ஹன்சிகாவின் த்ரில்லர் படம்.. விரைவில் அறிவிப்பு!

நடிகை ஹன்சிகா மட்டும் நடிக்கும் வித்தியாசமான த்ரில்லர் படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. 



தமிழில் முன்னணி நடிகையாக இருக்கும் ஹன்சிகா நடித்து வெளிவரவிருக்கும் திரைப்படம் ‘மஹா’. ஹன்சிகாவின் 50வது படமாக உருவாகியுள்ள இப்படத்தில் நடிகர் சிம்பு சிறப்புத்தோற்றத்தில் நடித்துள்ளார்.  ஜமீல் இயக்கியுள்ள இப்படம் விரைவில் ஓடிடியில் ரிலீசாக உள்ளது. த்ரில்லரில் பயமுறுத்தும் வகையில் உருவாகியுள்ள இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்திற்கு பிறகு ’மை நேம் இஸ் ஸ்ருதி’ என்ற தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார்.



இந்நிலையில் ஹன்சிகா நடிக்கவிருக்கும் புதிய படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. ராஜா டஸ்சா இயக்கும் இப்படத்தை பொம்மாக் சிவா தயாரிக்கவுள்ளார்.  சைக்கலாஜிகல் எத்ரில்லர் பாணியில் உருவாகும் இப்படத்திற்கு ‘ஒன் நாட் பைவ் மினிட்ஸ்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தின் கதை என்னவென்றால், வீட்டில் தனிமையில் இருக்கும் கதாநாயகி, எதிர்கொள்ளும் பிரச்சனைகளை முழுப்படமாக உருவாகவுள்ளது. 



சாதாரண படங்கள் போன்று இல்லாமல் இந்த படத்தில் ஸ்பெஷலான விஷயமும் உள்ளது. இந்த படம் ஒரே ஷாட்டில் ஒரு முழுப்படத்தையும் எடுக்கவுள்ளனர் படக்குழுவினர். இது தமிழில் புதுவித முயற்சியாக உருவாகவுள்ளது. இதில் ஹன்சிகா மட்டுமே நடிக்கவுள்ளார். வேறு எந்த நடிகரும் இந்த படத்தில் இல்லை. விரைவில் இந்த படம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக உள்ளது. இதேபோன்று சமீபத்தில் வெளியாகி தேசிய விருதுபெற்ற  ‘ஒத்த செருப்பு’ படத்தில் பார்த்திபன் ஒரே ஆளாக நடித்து அனைவரின் பாராட்டையும் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. 






வரவிருக்கும் நிகழ்வுகள்
Jan10

நடிகர் யோகி பாபு தமிழ் சினிமாவில் பல போராட்டங்களை,தாண

Jan23

 

கதை நன்றாக இருந்துவிட்டால் இப்போதெல்லாம் மொழி

Apr30

நடிகை சமந்தா எப்போதும் உடற்பயிற்சிக்கு அதிகம் முக்கி

Sep06

தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பகல் நிலவு என்ற ச

Mar07

பாக்கியலட்சுமி சீரியல் விஜய்யில் ஹிட் லிஸ்டில் இருக்

May01

இந்திய சினிமாவில் யாரும் எதிர்ப்பாரத வெற்றியை கே ஜி எ

Dec29

தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக இருப்பவர் டி.

Feb06

தமிழ் சினிமாவின் மாபெரும் உச்ச நட்சத்திரம் நடிகர் விஜ

Feb22

நடிகை கீர்த்தி சுரேஷ் தற்போது தென்னிந்திய சினிமாவில்

Jan28

கன்னட திரையுலகில் டாப் நடிகராக திகழ்ந்து வந்த புனித்

Nov03

விஷால் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘என

Sep04

சூர்யா நடிப்பில் கடந்தாண்டு தீபாவளிக்கு வெளியாகி வெற

Sep08

தமிழ் சினிமாவில் சிறந்த கதைகளை தேர்வு செய்து நடித்து

May02

தெலுங்கு சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் கொ

Apr12

தமிழ், மலையாளம் உள்ளிட்ட பல மொழி திரையுலகில் முன்னணி ந