More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • பருத்தித்துறையில்7 கொரோனா தொற்றாளர்கள் தலைமறைவு!
பருத்தித்துறையில்7 கொரோனா தொற்றாளர்கள் தலைமறைவு!
Jul 17
பருத்தித்துறையில்7 கொரோனா தொற்றாளர்கள் தலைமறைவு!

பருத்தித்துறை நகர் வர்த்தக தொகுதியில் மேலும் 7 வர்த்தகர்களுக்கு தொற்று உள்ளமை நேற்றைய பரிசோதனைகளில் கண்டறியப்பட்ட நிலையில் அவர்களில் 6 பேர் தலைமறைவாகியுள்ளனர்.



அவர்கள் அனைவரும் புத்தளம் மற்றும் காத்தான்குடியைச் சேர்ந்தவர்கள் என்பதால் காவற்துறையினர் ஊடாக அவர்களைக் கைது செய்ய சுகாதாரத் துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.



பருத்தித்துறை நகர் வர்த்தக தொகுதியில் 23 பேரிடம் முன்னெடுக்கப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் 7 வர்த்தகர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை நேற்று வெள்ளிக்கிழமை கண்டறிப்பட்டுள்ளது.பருத்தித்துறை நகர் முடக்கப்பட்டு வங்கிகள் மட்டும் அத்தியாவசிய சேவைகளில் ஈடுபட அனுமதிக்கப்பட்டது.

இந்த நிலையில் பருத்தித்துறை நகர் வர்த்தக தொகுதியில் 23 பேரிடம் முன்னெடுக்கப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் 7 வர்த்தகர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டது.



அதனையடுத்து தொற்றாளர்களை அடையாளம் கண்டு கொவிட்-19 இடைத்தங்கல் முகாமுக்கு அனுப்பும் பணியில் சுகாதாரத் துறையினர் ஈடுபட்ட போது 6 வர்த்தகர்கள் தலைமறைவாகியுள்ளனர்.



அவர்கள் 6 பேரும் பிசிஆர் மாதிரிகளை வழங்கிய நிலையில் தமது சொந்த ஊரான புத்தளம் மற்றும் காத்தான்குடிக்கு சென்றுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



அத்துடன், அவர்களிடன் பணியாற்றியவர்களை சுயதனிமைப்படுத்த சென்ற போது அவர்களும் தலைமறைவாகியுள்ளதால் காவற்துறையினரின் உதவியை சுகாதாரத் துறையினர் நாடியுள்ளனர்.



இதேவேளை, தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய குற்றத்துக்கு குறைந்தது ஒரு ஆண்டு சிறைத் தண்டனையும் 10 ஆயிரம் ரூபாய் தண்டப்பணமும் விதிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.






வரவிருக்கும் நிகழ்வுகள்
May25

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை ஓய்வுபெறும் சட்டமா அதிபர

Sep15

எதிர்காலத்தில் அவசர சத்திரசிகிச்சைகளிற்கு தேவையான ம

Sep26

வடக்கு – கிழக்கு மக்களுக்கு கெளரவமான அரசியல் தீர்வை

Jan25

கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாக வவுனியா நகரி

May04

  படுகொலைசெய்யப்பட்ட ஊடகவியலாளர் டி.சிவராமின் நினைவ

Mar14

அரச சேவையில் உள்ள பட்டதாரிகளை ஆசிரியர் பதவிக்கு தெரிவ

Jan20

கொரோனா தொற்று உறுதியான இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசே

Jul24

நாட்டில் நேற்றைய தினம் கொவிட் தொற்றால் 43 பேர் உயிரிழந்

Jul16

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந

Sep30

கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் தரவுகளின்படி

Mar24

தமிழ் தேசிய கூட்டமைப்பானது இந்த நாட்டுக்கோ, பௌத்த மதத

Jun12
Mar13

சந்தையில் சில சீமெந்து நிறுவனங்கள் தங்களது உற்பத்திக

Mar14

 புலமைப்பரிசில் பரீட்சையில் அகில இலங்கையில் யாழ்ப்

Apr15

யாழ்ப்பாணத்தில் மேலும் 25 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று