More forecasts: 30 day weather Orlando

இந்தியா

  • All News
  • ஒலிம்பிக்கில் பங்கேற்கும் வீரர்களுடன் முதல்வர் ஸ்டாலின் கலந்துரையாடல்!
ஒலிம்பிக்கில் பங்கேற்கும் வீரர்களுடன் முதல்வர் ஸ்டாலின் கலந்துரையாடல்!
Jul 17
ஒலிம்பிக்கில் பங்கேற்கும் வீரர்களுடன் முதல்வர் ஸ்டாலின் கலந்துரையாடல்!

ஜப்பானில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க உள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-



உலகின் மிகப்பெரிய விளையாட்டு போட்டியில் நீங்கள் கலந்துகொள்ள இருக்கிறீர்கள் என்பதை நினைக்கும்போதே உங்களுக்கு எத்தகைய பெருமை இருக்கிறதோ, அதேபோன்று எனக்கும் பெருமையாக இருக்கிறது.



நீங்கள் அனைவரும் வெற்றி பெற்று பதக்கங்களோடு தான் தமிழ்நாட்டுக்கு வருவீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு நிறையவே இருக்கிறது. மக்களுடைய நம்பிக்கையும் அது தான்.



உங்களில் பலருக்கும் வறுமை சூழ்ந்த வாழ்க்கையாக இருந்தாலும், விளையாட்டுப் போட்டிகளின் மீது உங்களுக்கு இருந்த ஆர்வமும், உங்கள் திறமை மீது நீங்கள் வைத்திருந்த நம்பிக்கையும் தான் உங்களை இந்த உயரத்துக்கு அழைத்து வந்துள்ளது.



இனிமேல் உங்களுக்கு பொருளாதார தடைகள் இல்லாதவாறு அரசு பார்த்துக்கொள்ளும். விளையாட்டில் திறமையுள்ளவர்களின் வளர்ச்சிக்கு பொருளாதாரம் ஒரு தடையாக இருக்கக்கூடாது என்பதில் அரசு உறுதியாக இருக்கிறது.



விளையாட்டு வீரர்கள் பயிற்சி பெறத் தேவையான பொருட்கள், தரமான உணவு, உறைவிடம், உலகத்தரம் வாய்ந்த பயிற்சிகள் வழங்கப்படுவது உறுதிசெய்யப்படும். விளையாட்டு போட்டிகளில் பெண்கள் அதிக ஆர்வத்தோடு பங்கெடுக்கிறார்கள். அவர்களுக்கான முழு உதவியையும் இந்த அரசு செய்யும்.



ஆண் வீரர்களுக்கு பொருளாதார தடை மட்டும்தான் இருக்கும். பெண் வீரர்களுக்கு அத்தோடு சேர்ந்து குடும்ப தடைகள், சமுதாய தடைகள் அதிகமாக இருக்கும். இந்த தடைகளை எல்லாம் தாண்டித்தான் ஒலிம்பிக் போட்டிகளில் பயிற்சிபெற நீங்கள் வந்துள்ளீர்கள். உங்களது திறமையைத் தமிழ்நாடு அரசு மெச்சுகிறது.



அடுத்தடுத்து நடைபெற இருக்கும் போட்டிகளில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் இன்னும் ஏராளமானவர்கள் கலந்துகொள்ளும் சூழலை அரசு ஏற்படுத்தித் தரும் என்று உறுதியளிக்கிறேன். இந்த அரசு விளையாட்டுத் துறைக்கு ஊக்கமளிக்கும் அரசாக இருக்கும் என்றார்.



 






வரவிருக்கும் நிகழ்வுகள்
Mar19

அகில இந்திய காங்கிரஸ் கட்சி அடுத்தடுத்து மிக மோசமான ப

Mar09

கேரளாவில் நடந்த தீ விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த

Aug01

பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் அமளியா

Aug15

* என்னை தொட்டால் கத்தியால் குத்திக் கொள்வேன் என போலீசா

Jul05

தமிழகத்தில் வெப்ப சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சு

May09

ஆந்திர பிரதேசத்தின் கடப்பா மாவட்டத்தில் மாமில்லப்பள

Jul20